சிறிநகர், டிச.23 ஜம்மு _ காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் இரு ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந் தனர். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர்.
ஜம்மு காஷ்மீரின் ரஜவுரி மாவட்டம் தேரா கி கலி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த புதன்கிழமை பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்தனர். அங்கு நடைபெற்ற தேடுதல் வேட்டையில் பாது காப்புப் படையினர் – தீவிர வாதிகள் இடையே மோதல் ஏற்பட் டது. இந்த மோதல் மறுநாளும் நீடித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் (21.12.2023) மாலையில் ஒரு லாரி மற்றும் ஒரு ஜீப்பில் கூடுதல் வீரர்கள் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் ரஜவுரி எல் லையை ஒட்டிய பூஞ்ச் மாவட் டத்தின் தாத்யார் மோர் என்ற இடத்தில் இந்த வாகனங்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத் தினர்.
இதில் 4 ராணுவ வீரர்கள் பரிதாப மாக உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படையினர் அனுப்பி வைக்கப்பட்டு தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெறுகிறது.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரஜவுரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் கடந்த 2021 அக்டோ பர் முதல் தீவிரவாதிகளின் தாக்குத லுக்கு 34 வீரர்கள் உயிரி ழந்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் 21.12.2023 வரை இது 20 ஆக உள்ளது. அடர்ந்த வனப் பகுதி மற்றும் சவாலான நிலப்பகுதியை கொண்ட இப்பிராந்தியத்தில் ராணு வம் தொடர் தாக்குதல்களை எதிர் கொள்கிறது.
இதனிடையே இந்த தாக்கு தலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்பின் துணை அமைப் பான, தடை செய்யப்பட்ட பாசிச விரோத மக்கள் படை (பிஏஎப்எப்) பொறுப்பேற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 20ஆ-ம் தேதி ராணுவத்தால் ஏற்பாடு செய்யப் பட்ட இப்தார் விருந்துக்கு பொருட் களை ஏற்றிச் சென்ற ராணுவ லாரி மீது தாக்குல் நடத்தப்பட்டது. இதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக் குதலை தற்போதைய தாக்குதல் ஒத்துள் ளது. மேலும் ஏப்ரல் மாத தாக்குதலுக்கு பிஏ எப்எப் பொறுப்பேற்று புகைப் படங்களை வெளியிட்டது.
இதனிடையே ரஜவுரி – பூஞ்ச் பிராந் தியத்தில் சுமார் 30 தீவிர வாதிகள் பதுங்கியிருக்க லாம் என சந்தேகிக்கப் படுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து ராணுவ
வட்டாரங்கள் கூறியதாவது:
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ் தானும் சீனாவும் இணைந்து கூட்டு சதியில் ஈடுபட்டுள்ளன. லடாக் பகுதி யில் கடந்த 3 ஆண்டுகளாக இந்திய ராணுவம் – சீனப் படைகள் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.
கடந்த 2020-இல் லடாக்கில் சீனாவின் அத்து மீறிய தாக்குதலை தொடர்ந்து காஷ் மீரின் பூஞ்ச் பகுதியில் இருந்த ராஷ்ட்ரி யரைபிள்ஸ் படையினர் லடாக் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment