சென்னை, டிச.5 'மிக்ஜாம்' புயல் ஆந்திராவின் பாபட்லா என்ற இடத்தில் கரையை கடக்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ‘மிக்ஜாம்’ புயல் ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மிக்ஜாம் புயல் அடுத்த சில மணி நேரத்தில் கரையை கடக்க வுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநி லம் பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடக்கிறது. இதனால் அப்பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது.
'மிக்ஜாம்' புயல் காரணமாக ஆந்திரா வின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலம் நெல் லூரில் 28.9 செ.மீ. மழையும், பாபட்லாவில் 21 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக அம்மாநில வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஆந்திரா வில் புயல் கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசி வருவதாகவும் வானிலை மய்யம் தகவல் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் இன்று (5.12.2023) ஆந்திராவின் பாபட்லா வில் கரையை கடக்கும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment