மதுரை, டிச.23- டில்லியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து பேசிய அவர், வெள்ள நிவாரணமாக தமிழ்நாடு அரசு வழங்கிய ரூ.6,000 நிதியை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியிருக் கலாம் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு களை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர், மாநில அளவில் சம்பந்தப்பட்ட அரசு மாநில பேரிடராக அறிவிக்க விரும்பினால் அதற்கான நடைமுறைகளுக்கு ஒன்றிய அரசு உதவும் என்று தெரி வித்தார்.
இந்நிலையில் நிர்மலா சீதாராமனின் கருத்து தொடர் பாக மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ‘எக்ஸ்’ வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளி யிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
“நிவாரணத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டியது தானே என்று நிர்மலா சீதாராமன் கூறியி ருக்கிறார். ரயில் டிக்கெட் எடுத்த பயணிகளை சிறீ வைகுண்டத்திலிருந்து ரயிலிலே கூட்டிவந்திருக்க வேண்டியது தானே! ஏன் நடக்கவிட்டு கூட்டிவந்தீங்க? என்று நாங்கள் கேட்க மாட்டோம். பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல”
-இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி. பதிவிட்டுள்ளார்.
Saturday, December 23, 2023
Home
தமிழ்நாடு
‘பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல!': சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்
‘பேரிடர் காலத்தில் மனிதர்களுக்குத் தேவை உடனடி உதவி! உபதேசம் அல்ல!': சு.வெங்கடேசன் எம்.பி. காட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment