அரியலூர்,டிச.21- அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 17.12.2023
ஞாயிறு மாலை 5.30 மணியளவில் தொடங்கி அரியலூர் கோபால் வணிக நிறுவன வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி நிகழ்ச்சிக்கு தலைமையேற்க, அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ் ணன், மாவட்ட இணை செயலா ளர் ரத்தின. ராமச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபன் ஆகியோர் முன் னிலை வகிக்க பெரம்பலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆசிரியர் பெ.நடரா ஜன் வரவேற்புரையாற்றினார்.
தலைமைக் கழக அமைப் பாளர் க.சிந்தனை செல்வன் பகுத்தறிவாளர்கள் கழகத்தின் நோக்கங்களையும், பகுத்தறி வாளர் கழகத்தை விரிவுபடுத்தி சிறப்பாக இயங்க வேண்டியதன் அவசியத்தையும், தமிழர் தலை வர் அவர்களின் விளக்கங்களை எடுத்துக் கூறி சிறப்புரையாற்றி னார்.
நிகழ்ச்சியில் மருத்துவர் லகாந்தி, மருத்துவர் அபி மன்யு, வெள்ளைச்சாமி, சுகாதாரத் துறை பச்சை முத்து, மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப் பாளர் மு.ராஜா, சீனி, அறிவு மழை, புலவர் அரங்க நாடன், பொறியாளர் இரா.கோவிந்த ராஜன், பொறியாளர் பெ.நடரா ஜன், செந்துறை ஒன்றிய செய லாளர் ராசா.செல்வகுமார், அரியலூர் ஒன்றிய தலைவர் சி.சிவக்கொழுந்து, ஒன்றிய செய லாளர் த.செந்தில், ஆட்டோ தர்மா, தி.அகநிலவன் உள்ளிட் டோர் பங்கேற்று கருத்துகளை எடுத்துக் கூறினர்.
அரியலூர் மாவட்ட பகுத் தறிவாளர்கள் கழக அமைப் பாளர் மு.ஜெயராஜ் நன்றி கூறி னார்.
கூட்டத்தில், அறிவாசான் தந்தை பெரியாரின் 50ஆவது ஆண்டு நினைவு நாளை முன் னிட்டு பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பாக அரியலூர் பெரம் பலூர் மாவட்டங்களில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியை சிறப்பாக நடத்தி முக்கிய பிரமுகர்களை அழைத்து பரிசுகள் வழங்க செய்வதெனவும், பகுத்தறிவாளர் கழக அமைப்பு களை மேலும் விரிவுபடுத்தி சிறப்பாக எதிர்வரும் ஜனவரி 2024 தொடங்கி மாதம் ஒரு முறை”பெரியார் பேசுகிறார் “என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்திடுவதெனவும் தீர்மானிக் கப்பட்டது.
புதிய பொறுப்பாளர்கள்
பகுத்தறிவாளர் கழகம், அரியலூர் மாவட்டம்
தலைவர்: பொறியாளர் பெ.நடராஜன், செயலாளர்: மு.ஜெயராஜ், அமைப்பாளர்: துரை.சுதாகர்
ப.க. ஆசிரியரணி
தலைவர்: இரா.செல்வக் குமார், செயலாளர்: அ. வீரமணி, அமைப்பாளர்: வி.சிவசக்தி
எழுத்தாளர் மன்றம் அமைப்பாளர்:
வெ.இராமகிருட்டிணன்
ஊடகப்பிரிவு
அமைப்பாளர்: சி.அறி வழகன்
கலைத்துறை
அமைப்பாளர் சு.கலை வாணன்
பெரம்பலூர் மாவட்டம்
தலைவர்: பெ.நடராஜன், செயலாளர்: மருத்துவர் லகாந்தி, அமைப்பாளர்: மு.கந்தசாமி.
No comments:
Post a Comment