திருவண்ணாமலை, டிச.3- திருவண் ணாமலையில் அண்ணாமலையார் கோயிலில் பரணிதீபமும், மலை உச்சிமீது கார்த்திகை தீபமும் ஏற்று கின்ற நிகழ்வு 26.11.2023 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. அப்போது மலைமீது சென்று தீபம் ஏற்றப்படு வதைக் காண்பதற்கு 2500 பேருக்கு மட்டும் அனுமதி அளிக் கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இலவச அனுமதிச் சீட்டைப் பெற முதல் நாள் இரவே திருவண்ணா மலை அரசு கலைக் கல்லூரி வளா கத்தில் ஏராளமானவர்கள் குவிந்த னர். அதனால் தள்ளுமுள்ளு ஏற் பட்ட நிலையில், 3 பேர் மயக்க மடைந்தனர். மேலும் பலருக்குக் காயம் ஏற்பட்டது.
இலவச அனுமதிச் சீட்டை திரு வண்ணாமலை அரசு கலைக் கல்லூரி யில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு, முதலில் வருவோ ருக்கு முன்னுரிமை என்ற அடிப் படையில் இந்த அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.
இலவச அனுமதிச் சீட்டை வழங் கத் தொடங்கியதும் ஒரே நேரத்தில் அனுமதிச்சீட்டைப் பெறுவதற்காக குவிந்தவர்களில் பலரும் சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு சென்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், பலரும் அங்கே கீழே விழுந்தனர். அவர்களில் சுமார் 10 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. மேலும், இதில் மூன்று பெண்கள் மயக்கமடைந்துள்ளனர். அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத் துச் செல்லப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பக்தியோடு வழிபடச் சென்ற பக்தர்களுக்கு நேர்ந்துள்ள இந்தக் கதியினால் அண்ணாமலை கடவு ளரின் சக்தி என்னாயிற்று என்று இப் போதாவது பக்தர்கள் சிந்திப்பார் களாக!
No comments:
Post a Comment