கேலியைப்பற்றி பி.ஜே.பி. பேசலாமா? ஹமீது அன்சாரியை மோடி கேலி செய்யவில்லையா? - காங்கிரஸ் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

கேலியைப்பற்றி பி.ஜே.பி. பேசலாமா? ஹமீது அன்சாரியை மோடி கேலி செய்யவில்லையா? - காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி, டிச. 23- நாடாளுமன்ற பாதுகாப்பு தோல்வியை மறைக் கவும், நாடாளுமன்றத்தில் விளக் கம் அளிக்காமல் தப்பிப்பதற்கா கவும் அவையை அமைதியின்மை ஆக்கியதாக கூறி 146 எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது ஒன்றிய மோடி அரசு. இந்த எதேச்சதிகாரத்தை கண் டித்து 19.12.2023 அன்று இடை நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர் கள் நாடாளுமன்ற வாயிலில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் திரி ணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் கல்யாண் தன்னை போல “மிமிக்ரி” செய்ததாகவும், இதனை ஆதரித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி ‘வீடியோ’ எடுத்ததாகவும் குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர் குற்றம் சாட்டி னார். 146 எதிர்க்கட்சி உறுப்பி னர்களின் இடைநீக்க விவகா ரத்தை திசை திருப்பும் விதமாக பிரதமர் மோடி ஜகதீப் தன்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வேதனையை வெளிப்படுத்தினார். பாஜக அமைச் சர்கள், எம்.பி.க்கள் ஜகதீப் தன்க ருக்கு ஆதரவாகவும், மிமிக்ரிக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் திசை திருப்பும் செயல்களில் கச்சிதமாக ஈடுட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் பதிலடி

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மேனாள் குடியரசு துணைத்தலைவரும், மாநிலங் களவை தலைவருமான ஹமீது அன்சாரியை, பிரதமர் மோடி அவமதித்த ‘வீடியோ’வை வெளி யிட்டு பாஜகவின் திசை திருப்பல் சம்பவத்திற்கு பதிலடி கொடுத் துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் எக்ஸ் தளத்தில் ஜெய்ராம் ரமேஷ், கூறுகையில்,” இந்தியா வின் குறிப்பிடத்தக்க ராஜதந்திரி களில் ஒருவரான ஹமீது அன்சாரி குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவராக 10 ஆண்டுகள் பணியாற்றி 2017 ஆகஸ்ட் 10 அன்று ஓய்வு பெற்றார். நாடாளு மன்ற அரங்கில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வின் பொழுது அவரை கேலி செய்யும் வகையில் பிரதமர் மோடி பேசியிருந்தார். அதாவது ஹமீது அன்சாரியின் மத அடையா ளத்தை குறிப்பிட்டு அன்சாரி யின் அரசியல் சாதனைகள் அனைத்துமே அவரது மத அடையாளத்தால் மட்டுமே கிடைத்ததாக பேசினார். இப்படி ஒரு அவதூறு நிகழ்வை அரங்கேற்றிய பிரதமர் மற்றும் அவரை சார்ந்தோர் தற்போது அவமரியாதை குறித்து பேசுவது சந்தர்ப்பவாதம் மட்டுமே. மக் களவையில் நடந்த அத்துமீறல் சம்பவம் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் ஆகியவற்றிலிருந்து திசை திருப் பவே இவ்வாறு நடந்து கொள் கின்றனர்” என்று தனது எக்ஸ் தளத்தின் பதிவில் குறிப்பிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

‘வீடியோ’ வெளியானதும் பாஜக மீண்டும் திசை திருப்பல் போராட்டம்

குடியரசு மேனாள் துணை தலைவர் ஹமீது அன்சாரியை பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடியே கேலி செய்ததாக கூறி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ஆதாரத்து டன் பதிலடி ‘வீடியோ’ வெளியிட்டதால் அதிர்ச்சி அடைந்த பாஜக வழக்கம் போல இவ்விவ காரத்தை திசை திருப்பும் நோக் கில் மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் “மிமிக்ரி” சம்பவத் திற்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே பாஜக பெண் நாடாளுமன்ற உறுப்பி னர்கள் போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment