தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்துவதா? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

தமிழ்நாட்டு மக்களை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவமானப்படுத்துவதா? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

featured image

சென்னை,டிச.23-“2015ஆம் ஆண்டு முதல் பேரிடர்களினால் ஏற்பட்ட சேதங்களை தற்காலிக மாக மற்றும் நிரந்தரமாக சீர மைக்கவும், பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிய மொத்தத் தொகை என் பது ரூ.1,27,655.80 கோடி ஆகும்.

இதில் ஒன்றிய பாஜக அரசால் ரூ.5,884.49 கோடி மட்டுமே விடு விக்கப்பட்டுள்ளது. இது ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரிய தொகையில் 4.61 விழுக்காடு மட் டுமே” என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்களுக்கு தமிழ்நாடு நிதிய மைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“டிசம்பர் 4-ஆம் தேதியன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள் ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட் டங்களிலும், டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பெய்த மழை, அதனால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளை அனைவரும் அறி வீர்கள். தமிழ்நாடு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைக ளால் தான் பேராபத்து தவிர்க்கப் பட்டது.

நாட்டு மக்கள் அனைவரும் அறிந்த இந்த பாதிப்புச் செய்தி, இந்தியாவில் ஒரே ஒருவருக்கு மட்டும் தெரியவில்லை. அவர்தான் இந்தியாவின் நிதி அமைச்சராக இருக்கிற நிர்மலா சீதாராமன். ஏதோ எதிரி நாட்டின் மீது போர் தொடுக்கும் எரிச்சல் மொழியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் அளித்துள்ள பதில் தமிழ்நாடு மக்களை ஒட்டுமொத்தமாக அவ மானப்படுத்துவது ஆகும்.

மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு களை பிரதமர் நரேந்திர மோடி யைச் சந்தித்து கடந்த 19ஆம் தேதி அன்று விளக்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 20 நிமிடங்கள் முதலமைச்சர் சொன் னது அனைத்தையும் கேட்டுக் கொண்ட பிரதமர், ‘இது தொடர் பான கோரிக்கை மனு கொண்டு வந்துள்ளீர்களா?’ என்று கேட் டார்.
ஆம் என்றதும், அதனை வாங்கி வைத்துக் கொண்டார். ‘உங்கள் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருகிறேன். இதை விட எனக்கு வேறு பணி இல்லை’ என்று பிரதமர் சொன்னார்.

தமிழ்நாட்டில் டிசம்பர் 4, 17, 18 ஆகிய மூன்று நாட்கள் பெய்த மழை என்பது வரலாறு காணாதது. 50 ஆண்டுகள் கழித்து பெய்கிறது, 100 ஆண்டுகள் கழித்து பெய்கிறது என்று சொல்லத் தக்க மழையளவு ஆகும்.

எனவேதான் அது ஏற்படுத்திய பாதிப்பு என்பது மிகமிக அதிகமா னது. இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று முதல மைச்சர் கோரிக்கை வைத்தார்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல் பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட் டங்களில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள் வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத்தொகையாக 12,659 கோடி ரூபாயும் முதல மைச்சர் கோரி உள்ளார்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட் டங்களில் ஏற்பட்டபாதிப்புகள் இன்னும் முழுமையாக அளவிடப் படவில்லை. எனவே, அவசர நிவா ரண நிதியாக 2 ஆயிரம் கோடி தரவேண்டும் என்றும் முதலமைச் சர் பிரதமரிடம் கோரியுள்ளார். ஆக மொத்தம் 21 ஆயிரத்து 692 கோடி ரூபாய் தமிழ்நாடு அரசால் ஒன்றிய அரசிடம் கேட்கப்பட் டுள்ளது.

அதாவது ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வைத்துள்ள கோரிக்கை என்பது கடும் பேரிடராக (Calamity of severe nature) அறிவிக்க வேண்டும் என்பதும், 21 ஆயிரம் கோடியை நிவாரணமாகத் தர வேண்டும் என்பதும் ஆகும்.

இந்த இரண்டும் கிடையாது என்பதைத் தான் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவருக்குத் தெரிந்த ஆணவ மொழியில் சொல்லி இருக்கிறார்.
தி.மு.க. அரசையும், முதலமைச்ச ரையும் அவமானப்படுத்துவதாக நினைத்து, தமிழ்நாடு மக்களை அவமானப்படுத்தி இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பாதிப்பையும், பாதிக்கப்பட்ட மக்களையும், அவர்கள் அடைந்த துயரங்களையும், அனுபவிக்க இருக் கும் துன்பங்களையும் கவனத்தில் கொள்ளாமல் ‘ தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது, அப்படி இது வரை அறிவித்தது இல்லை’ என்று சொல்வதன் மூலமாக தனது இரக்கமற்ற குணத்தைத் தான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மக்கள் துன்ப துயரங்களை அடைந்து வரும் நேரத்தில் அவர் களைக் கேலி செய்வதைப் போல இருக்கிறது அவர் அளித்திருக்கும் பேட்டி.
ஒன்றிய அரசின் அமைப்பு களின் சார்பில் என்னனென்ன மீட்புப்பணிகள் நடந்துள்ளது என்பதை எல்லாம் நிதி அமைச்சர் தனது பேட்டியில் சொல்லி இருக் கிறார். இது எதுவும் புதிய செய்தி அல்ல.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் நெல்லையில் வைத்து அளித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன் னவை தான். ஒன்றிய பாதுகாப்புப் படையும் ராணுவமும் எந்த வகை யில் ஒத்துழைத்து மீட்புப் பணியைச் செய்துள்ளது என்பதை முதலமைச்சர் அவர்களே விளக் கிச் சொல்லி விட்டார். ஒன்றிய பாதுகாப்புப் படை ஒத்துழைக்க வில்லை என்றோ, ராணுவம் வர வில்லை என்றோ நாங்கள் குற்றச் சாட்டை வைக்கவுமில்லை.

நிதி அமைச்சர் சொன்னது புதிய செய்தியும் அல்ல. தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்புகளை வரி சையாகப் பார்த்தாலே ஒன்றிய பாதுகாப்புப் படை குறித்த செய்தி கள் அதிகம் உள்ளன.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி அளிக்க இருக் கிறார் என்று கேள்விப்பட்டதும், தமிழ்நாட்டுக்கான நிதியை அறி விக்கவே அவர் பேட்டிக்கு ஏற்பாடு செய்திருப்பதாக நான் முதலில் நினைத்தேன். ‘நிதி கிடையாது’ என்று சொல்வதற்காக எதற்காக பேட்டி தர வேண்டும்?பொய்யும் வன்மமும் கலந்த குற்றச்சாட் டுகளை வைப்பதன் மூலமாக தமிழ்நாடு அரசின் மீது தவறான கற்பிதத்தை உருவாக்க ஊடகங் களை நிர்மலா சீதாராமன் பயன் படுத்தி இருக்கிறார்.தமிழ்நாடு அரசு கேட்டது 21 ஆயிரம் கோடி. ஆனால், அதில் இதுவரை வந்திருப்பது 450 கோடி மட்டுமே.

இதுவும் தமிழ்நாடு அரசுக்கு வழக்கமாக வழங்கப்பட வேண்டிய நிதி தானே தவிர, இப்போது ஏற் பட்ட புயல் – மழை – வெள்ளச் சேதங் களில் இருந்து மீட்க தரப்பட்ட சிறப்பு நிதி அல்ல.
ஒன்றிய அரசின் பங்கானது ஆண்டுதோறும் இரு தவணைக ளில் நமக்கு அளிக்கப்படுகின்றது. அதாவது இரண்டு தடவை தலா 450 கோடி ரூபாய் நமக்கு அளிக்கப் படும்.
ஒரு இயற்கைப் பேரிடரின் தாக் கம் மிகக் கடுமையாக இருக்கும் போது இந்த SDRF- நிதி போத வில்லை என்றால், அந்த இயற்கைப் பேரிடரைக் கடும் இயற்கைப் பேரி டராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்துNDRF- கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.சென் னையில் ஏற்பட்ட பெரு வெள்ளத் தையும், தற்போது தென் மாவட் டங்களில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தையும், இவ் வாறு கடும் பேரிடர்களாக அறிவித்து NDRF-இல் இருந்து கூடுதல் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று தான் நாங்கள் பலமுறை கோரிக்கை வைத்துள்ளோம்.
ஆனால் NDRF-இல் இருந்து இதுவரை நமக்கு கூடுதல் நிதி எதுவும் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை.ஒன்றிய அரசிடமிருந்து நமக்கு வந்த 450 கோடி ரூபாய் நிதி என்பது இந்த ஆண்டு நமது ஷிஞிஸிதி-க்கு ஒன்றிய அரசு அளிக்க வேண்டிய இரண்டாவது தவணை தானே தவிர, கூடுதல் நிதி அல்ல. தமிழ்நாடு மக்களை ஒன்றிய பாஜக அரசு எத்தகைய அலட்சியத்தோடு நடத்துகிறது என்பதற்கு உண் மையான எடுத்துக்காட்டு இது.

அதேபோல, பிரதமர் _- முத லமைச்சர் சந்திப்பையும் கொச் சைப்படுத்தி இருக்கிறார். ‘ஒரு நாள் முழுக்க டில்லியில் இருந்த முதலமைச்சர், போகிற போக்கில் சந்தித்துக் கொள்ளலாம் என்ற தோரணையில் பிரதமர் மோடியை இரவில் சந்தித்தார்’ என்று சொல்லி இருக்கிறார் நிர்மலா சீதாராமன். பிரதமர் தன்னைச் சந்திக்க வருபவர் களுக்கான நேரத்தை அவர் தான் தீர்மானிப்பார் என்பதைக் கூட தெரியாதவராக ஒருவர் நிதி அமைச்சராக இருப்பது வேதனை தருகிறது.

மதியம் 12.30 மணிக்கு வரலாம் என்று நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம். அதன்பிறகு இரவு 10.30 மணிக்கு வரலாம் என்று நேரத்தை மாற்றியது பிரதமர் அலுவலகம். எனவே இரவில் சந் திக்க நேரம் ஒதுக்கியது பிரதமர் அலுவலகம் தானே தவிர, முதல மைச்சர் அல்ல. தமிழ்நாடு முதல மைச்சர் யாரிடமும், எந்த சூழலி லும் தோரணை காட்டக் கூடியவர் அல்ல. ‘மழை பெய்யும்போது முதலமைச்சர் எங்கே இருந்தார்?’ என்று கேட்கிறார் நிர்மலா சீதாராமன். ‘இண்டியா’ கூட்டணி கூட்டத் துக்குச் சென்றிருந்ததைச் சுட்டிக் காட்டுகிறார்.
‘இண்டியா’ என்றாலே இவர் களுக்கு எரிச்சலாக இருக்கிறது. அதனைத் தான் நிர்மலா சீதாரா மன் வெளிப்படுத்தி இருக்கிறார். பிரதமரைச் சந்திப்பதற்காகவும் சேர்த்தே தான் முதலமைச்சரின் டில்லி பயணம் திட்டமிடப் பட்டது.

பற்றி எரிந்த மணிப்பூருக்கு ஒன்றிய மாண்புமிகுக்கள் ஒரு தட வையாவது போனார்களா? மயி லாப்பூருக்கு வந்து காய்கறி வாங்கி போட்டோ எடுத்துக் கொண்ட நிதி அமைச்சர், 4-ஆம் தேதி புயல் – வெள்ளப் பாதிப்புகளைப் பார்க்க வாவது ஒரு முறை சென்னை வந்தாரா? என்று எங்களாலும் கேட்க முடியும். டில்லி சென்ற ஒரே ஒரு நாள் தவிர – அனைத்து நாட்களும் மக்களோடு மக்களாகத் தான் இருந்தார் முதலமைச்சர். இதை தமிழ்நாடு மக்கள் அனை வரும் அறிவார்.

‘ஒரே நாடு – ஒரே தேசம்’ என்ப தில் உண்மையான அக்கறை இருப் பவராக இருந்தால் தமிழ்நாட்டில் நடந்த பாதிப்புகளை கடும் பேரிடராக அறிவியுங்கள், தமிழ் நாடு அரசு கோரும் நிவாரண நிதியை விடுவியுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment