தருமபுரி, டிச 13 – ஜாதிவாரி கணக் கெடுப்பு கோரி தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி கருத்தரங்கம் மற் றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் தலைமை தங்கினார். தருமபுரி மாவட்ட பொறுப்பாளர் பி.தீர்த்தராமன் அனைவரையும் வரவேற்றார். அகில இந்திய காங்கிரஸ் ஒ.பி.சி. தலைவர் கேப்டன் அஜய்சிங் யாதவ் அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்வில் கிளைக் கழக, ஒன்றிய, மாவட்ட, அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கே.எஸ்.அழகிரி பேசுகையில் :
பிஜேபி ஒரு சார்புடைய கட்சி, அது ஒருபோதும் பொதுவான கட்சியாக செயல்படாது என்றும், ஆர். எஸ். எஸ். அமைப்பு அனைத்து இடங்களிலும் ஊடுருவி உள்ளது. அந்த ஊடுருவல்கள் தடுத்து நிறுத் தப்பட வேண்டும், அனைத்து மக்களுக்கும் அனைத்தும் கிடைக் கப் பெற வேண்டும் – அதற்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம் என்றார்.
ஆர்.எஸ்.எஸ். கொள்கை மக் கள் விரோதக் கொள்கையைக் கொண்டது. ஆனால், காங்கிரஸ் மக்களுக்கான உயர்ந்த கொள்கை கொண்ட கட்சி என்று குறிப்பிட் டார். ஸநாதன எதிர்ப்பு என்பது ஹிந்து மதத்தில் இருக்கும் குறை பாடுகளை நீக்கவே காங்கிரஸ் போராடுகிறது என்றும், காங் கிரஸ் ஹிந்துகளுக்கு எதிரான கட்சி அல்ல என்றும் குறிப் பிட்டார்.
மதச்சார்பின்மை மற்றும் சகோ தராதத்துவம் ஆகியவற்றை காப் பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம், ஆனால் பிஜேபி நாட்டு மக்களை பிரிக்கும் நோக்கத்தில் இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். பிறமதம் கூடாது எனவும், ஹிந்து மதம் மட்டும் தான் இருக்க வேண்டும் எனவும் விரும்புகிறது. அதனால்தான் காஷ்மீர் விவகாரம், மசூதிகள் இடிப்பு, ஜாதிச் சண்டை, மதச் சண் டைகள் போன்றவை ஆர்.எஸ்.எஸ். மதவெறி காரணமாக நடக்கிறது.
நாட்டில் உணவு உண்ணக் கூட உரிமை இல்லாமல் போகிறது, உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக் கறி வைத்திருந்தனர் என்பதற் காக 22 பேரை அடித்து கொன்ற கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்விற்கு பிரதமர் மோடியோ அல்லது உ. பி. முதல மைச்சரோ வாய் திறக்கவேயில்லை என்பது தான் உண்மை.
இப்படிப்பட்ட சூழலில் தான் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட மக்கள் தொகை கணக் கெடுப்பில் ஜாதி வாரி கணக் கெடுப்பும் தேவை.
இதன் மூலமாகத்தான் நாம் நமது உரிமைகளை நிலைநாட்ட முடியும். ஜாதிவாரி கணக் கெடுப்பை எடுக்காமல் பிஜேபி அரசு அரசி யல் செய்கிறது, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட மக்களின் உரிமையை நசுக்குகிறது என்றார்.
நடந்து முடிந்த நான்கு மாநில நாடாளுமன்ற தேர்தல் எங்களுக்கு பின்னடைவை தந்தாலும் பி.ஜே. பி.யை விட வாக்கு சதவீகிதத் தில் அதிக வாக்குகள் காங்கிரஸ் பெற் றிருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். மேலும் அடுத்து வரக் கூடிய இந்த நான்கு மாநிலங்களின் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் காங்கிரஸ் வெற்றிபெறும் என்று தெரிவித்தார்.
ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம் பற்றியும், இடஒதுக்கீட்டு உரிமையை தந்தை பெரியார், காம ராசர், நேரு ஆகியோர் எப்படி கையாண்டார்கள் என்றும், முதல் சட்ட திருத்தம் கொண்டு வந்து பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி யிலும், வேலைவாய்ப்பிலும் முன் னுரிமை பெற்றுத் தந்தது காங்கிரஸ் கட்சி தான் – அதற்கு போராட்டக் களம் அமைத்து பின்னால் நின்றவர் பெரியார் என்றும் குறிப்பிட்டு பேசினார்.
இந்த நிகழ்வில் அனைவருக்கும் மாவட்ட காங்கிரஸ் கட்சி பொறுப் பாளர் பி. தீர்த்தராமன் அவர்கள் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment