9.12.1973 அன்று மாநாட் டில் இறுதியாகப் பெரியார் பேருரை நிகழ்த்தினார்:-
"பேரன்புமிக்க தாய்மார்களே! பெரியோர் களே! தமிழ்நாடு முழுவதிலும் இருந்து இங்கு எழுந் தருளியிருக்கும் பிரதிநிதிகளே! சொற்பொழிவாற்றிய பேரறிஞர்களே!
இப்போது நல்லசொற்பொழிவுகளைக் கேட்டு, ரொம்ப உணர்ச்சியோடு, பக்குவமான நிலையில் இருக்கிறீர்கள். நான் பேசுவதன்மூலம் எங்கே இது கலைந்து போய்விடுமோ என்று பயப்படுகிறேன். அவ்வளவு நல்ல தெளிவாக, யாருக்கும் விளங்கும் படியும், ஒவ்வொருவர்மனமும் உடனே காரியத்தில் இறங்கும்படி யான உணர்ச்சி ஏற்படும் படியும், நல்லவண்ணம் அவர்கள் பேசினார்கள். எனக்கும் தெரியாத, இதுவரையிலும் நான் தெரிந் திருக்காத, அநேக அருமையான விஷயங்களை எல்லாம் பேசினார் கள். நாம் செய்வது ரொம்ப அவசியமான காரியம்-ஞாயமான காரியம் என்று கருதும்படி நல்லவண்ணம் விளக்கினார்கள். இனி நான் சம்பிரதாயத்துக்குத்தான் இரண்டொரு வார்த்தைகள் பேச வேண்டியிருக்கிறது.
No comments:
Post a Comment