கன மழையால் பாதிக்கப்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடன் ஒன்றிய நிதி அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 11, 2023

கன மழையால் பாதிக்கப்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் மூலதன கடன் ஒன்றிய நிதி அமைச்சருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை, டிச. 10- தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் “மிக்ஜாம்” புயல் காரண மாக ஏற்பட்ட பெரு மழையால் பாதிக்கப் பட்டுள்ள குறு. சிறு மற் றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கூடு தல் மூலதன கடனுதவி வழங்கிடவும், காப்பீட்டு தொகையை விரைந்து வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக் கைகளை வலியுறுத்தி மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று (9.12.2023) கடிதம் எழுதி யுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “அண் மையில் ஏற்பட்ட “மிக் ஜாம்” புயல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களி லுள்ள தொழில் நிறுவ னங்களை கடுமையாக பாதித்து உற்பத்தியிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டங்களில் 24 தொழிற்பேட்டைகளில் உள்ள சுமார் 4800 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இடைவிடாத பெரு மழையினால் அதிகமான பாதிப்பிற்குள்ளானது மட்டுமல்லாமல் மூலப் பொருட்கள் மற்றும் உற்பத்தியான பொருட் கள் சேதம் அடைந்து தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்பட இயலாத நிலையில் உள்ளது.

இந்த நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது, ஏற் றுமதி மற்றும் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிப்பது ஆகிய வற்றை கருத்தில் கொண்டு இந்நிறுவனங்களை உடனடியாக மீட்டெடுப் பது அவசியமென்பதினை தமிழ்நாடு முதல்-அமைச் சர் வலியுறுத்தியுள்ளார்.

மாநில அரசு மின் விநியோகம் மற்றும் சாலை போக்குவரத்தை உடனடியாக சீர் செய் துள்ளபோதும், இந்நிறு வனங்கள் மீண்டும் முழு மையாக உற்பத்தியை துவங்க சிறிது காலம் தேவைப்படும் என்பதால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் திருப்பி செலுத்தும் காலத்தை மாற்றியமைத் திடவும், கூடுதல் மிகைப் பற்று (Over Draft) வசதி யினை வழங்கிடவும், கூடு தல் நடைமுறை மூலதன கடன் வழங்க வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங் களை அறிவுறுத்தவும், காப்பீட்டு தொகையை காலதாமதமின்றி மதிப் பீடு செய்து உடனடியாக விடுவிக்க விரைந்து நடிவ டிக்கை எடுக்க காப்பீட்டு நிறுவனங்களை அறிவு றுத்திடவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள குறு சிறு மற்றும் நடுத் தரத் தொழில் நிறுவனங் கள் பொருளாதார ரீதி யாக மீண்டெழ உறு துணையாக அமையும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள் ளார்” என்று அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment