சீரானது மாநகரப் போக்குவரத்து அனைத்து வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 7, 2023

சீரானது மாநகரப் போக்குவரத்து அனைத்து வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கம்

featured image

சென்னை, டிச.7 ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக தமிமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகு திகள் பெரிதும் பாதிப்பை சந்தித்துள் ளன. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சாலைகளில் தேங்கிக் கிடந்த தண்ணீர் வடிந்ததால், சென்னையில் அனைத்து வழித்தடங்களிலும் மாநகரப் பேருந்து இயக்கம் சீராகியுள்ளது. மொத்தமுள்ள 603 வழித்தடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக நாளொன்றுக்கு 2600 பேருந்துகள் சராசரியாக இயக்கப்படும் நிலையில் தேவைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதைபோல, சென்னை புறநகர் ரெயில் சேவை இன்று (7.12.2023) வழக்கம் போல் செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி, சென்னை சென்டிரல் – அரக்கோணம், சென்னை கடற்கரை – செங்கல் பட்டு, சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி வழித்தடத் தில் இயக்கப் படும் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படுகின்றன. அதேநேரம் சூலூர்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித் தடத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் திருவொற்றியூரில் இருந்து 30 நிமிடங்களுக்கு ஒரு ரயில் என இயக்கப்படும் என தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment