நாடாளுமன்ற தாக்குதல் ஏழு பேர் பணியிடை நீக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 14, 2023

நாடாளுமன்ற தாக்குதல் ஏழு பேர் பணியிடை நீக்கம்

டில்லி, டிச. 14- நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலை முன்னிட்டு 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய (13.12.2023) நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. அவர்கள் பார்வையாளர் மாடத் தில் இருந்து மக்களவைக் குள் குதித்த அந்த நபர் கள், கண்ணீர்ப் புகைக் குண்டு வீசும் குப்பிகள் போன்ற பொருளை வீசி அதிலிருந்து மஞ்சள் நிற புகை வெளியாகி மக்க ளவை முழுவதும் பரவி யது .
அந்த இருவரும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. அதே வேளை யில் நாடாளுமன்ற கட் டடத்திற்கு வெளியே மஞ்சள் மற்றும் சிவப்பு நிற புகையை வெளிப் படுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். காவல் துறையினர் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக, பாது காப்புப் பணியாளர்கள் 7 பேரை பணியிடை நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவிட்டுள் ளது. இந்த நடவடிக்கை மக்களவை பாதுகாப்பில் கவனக்குறைவு மற்றும் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக எடுக்கப் பட்டுள்ளது.
இதையொட்டி கூடுதல் பாதுகாப்புடன் நாடாளுமன்றம் மீண் டும் கூடி நடைபெற்று வருகிறது. பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு அவைக்குள் உறுப் பினர்கள் அனுமதிக்கப் பட்டனர்.

No comments:

Post a Comment