இராணிப்பேட்டை, டிச. 22- தமிழர் தலைவர் விடுத்துள்ள வேண்டு கோள்படி 21.12.2023 மாலை ஆறு மணிக்கு இராணிப் பேட்டை மாவட்டம் பனப் பாக்கம் கலைஞர் அரங்கத்தில் அறிவாசான் தந்தைபெரியார் 50ஆம் ஆண்டு நினைவுநாள், தமிழர் தலைவர் ஆசிரியர் 91-ஆவது பிறந்த நாள் விழா, விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள் விழாவில், பகுத்தறி வுப்போராளி ஆசிரியர் அவர் களின் 91ஆவது பிறந்தநாள் விழா மலர், வாழ்வியல் சிந் தனை பாகம்-17 நூல்வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டத்தலைவர் சு.லோகநாதன் தலைமை வகித் தார் மாவட்டச் செயலாளர் செ.கோபி வரவேற்புரையாற் றினார். ஆலப்பாக்கம் இராவ ணன் இன எழுச்சிப் பாடலை பாடினார்.
நெமிலி ஒன்றியத்தலைவர் பெரப்பேரி சங்கர்,மதிமுக ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் , பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியக்குமார், மாவட்டச் செய லாளர் சொ.சீவன்தாசு ஆகி யோர் உரையாற்றினார்கள்.
தலைமைக்கழக அமைப் பாளர் பு.எல்லப்பன் தொடக் கவுரையாற்றினார்.
கழகப்பேச்சாளர் இரா.பெரியார்செல்வம் பகுத்தறிவுப் பகலவன் மறைந்துஅய்ம்பது ஆண்டுகாலத்தில் தமிழர் தலைவர் ஓய்வின்றி உழைத் தமையால் பெற்ற பயன்களை பட்டியலிட்டு அனைத்து தமி ழினப் பெருமக்களும் அவருக்கு நன்றிகாட்ட வேண்டும் என் பதை விளக்கி உரையாற்றினார் நூல்களை அறிமுகம் செய்து மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடுஇரா. குணசேகரன் உரையாற்றினார்.
நெமிலி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு நூல்களை வெளியிட்டு தமிழர் தலைவர் அவர்கள்மீது தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் கொண்டிருக்கும் அன்பினை அறிந்திருக்கிறோம்.
ஆசிரியர் அவர்கள் ஒன்றிய அரசின் சூழ்ச்சிகளை முறிய டித்து நமது திமுக ஆட்சியை பாதுகாத்து வருவதை விடு தலை வாயிலாக படித்து மகிழ் கிறோம் எனகருத்துரையாற்றி னார்.
பேரூராட்சி தலைவர் கவிதா சீனிவாசன் விரைவில் பனப் பாக்கத்தில் தந்தைபெரியார் சிலை நிறுவப்படும் ஆசிரியர் அய்யா அவர்களை அழைத்து திறந்துவைப்போம் என உரை யாற்றினார்.
மூன்று புத்தகங்களும் அடங்கிய தொகுப்பினை ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு-10 மாவட்ட திமுக நெசவாளரணி அமைப்பாளர் குலோத்துங்கன்-2 காவேரிப் பாக்கம் மேனாள் திமுக செய லாளர் போ.பாண்டுரெங்கன்-1 என 20 தொகுப்பு புத்தகங்களை பெற்று மகிழ்ந்தார்கள்.
தலைமைக் கழக அமைப் பாளர் பு.எல்லப்பன் ரூ.2,000, பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியகுமார்ரூ.5,000, மாவட்ட அமைப்பாளர் சொ.சீவன்தாசு ரூ.2,000 பனப்பாக்கம் பேரூ ராட்சி தலைவர் கவிதா சீனி வாசன் ரூ.2,000 விடுதலை சந் தாக்கள் வழங்கினார்கள்.
மாவட்டக்கழகம் சார்பில் தலைமைக்கழக அமைப்பாளர் பொறுப்பேற்றுள்ள பு.எல்லப் பன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் பொன்னை பெரியார் ஆவின் பால் உரிமையாளர் சுயமரி யாதை வீரர் துரை.வெற்றிச் செல்வன், பெரியார்பெருந் தொண்டர் இராசா, உறந்தை பெரியார் மணி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.இறுதியில் மதிமுக பொறுப்பா ளர் ஏ.ஞானப்பிரகாசம் நன்றி கூறி விழா இனிதே நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment