ராஜஸ்தான் பா.ஜ.க.வில் நேர்மை - ஒழுக்கம் எதுவும் இல்லை மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

ராஜஸ்தான் பா.ஜ.க.வில் நேர்மை - ஒழுக்கம் எதுவும் இல்லை மேனாள் முதலமைச்சர் அசோக் கெலாட்

featured image

புதுடில்லி, டிச. 10- ராஜஸ்தான் தேர்தலில் தோல்வி குறித்து ஆய்வு செய்ய அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக் கெலாட் டில்லி சென்றுள்ளார். நடந்து முடிந்த அய்ந்து மாநிலத் தேர்தலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் பறிகொடுத்தது. மத்தியப் பிரதேசத்திலும் தோல்வியைத் தழுவிய நிலையில் ஆறுதலாக தெலங்கானாவில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது.

ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக பேரவைத் தேர்தல்களின்போது ஆட்சி மாற்றம் நீடித்து வருகிறது. பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை என்ற நிலையில், 115 இடங்களில் வென்று பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.

காங்கிரஸ் 69 இடங்களில் மட்டுமே வெற்றி பெற் றுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தானில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து அதுகுறித்து ஆய்வு செய்ய, அக்கட்சி யின் மூத்த தலைவரும் தற்காலிக முதலமைச்சருமான அசோக் கெலாட் டில்லி சென்றுள்ளார்.

ராஜஸ்தான் தேர்தலில் கட்சியின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் டில்லி கூட்டத்தில் பங்கேற்கிறார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், ‘தேர்தல் முடிவுகள் வந்து 7 நாள்களாகியும் பாஜக, மூன்று மாநிலங் களிலும் முதலமைச்சர் யார் என்பதை அறிவிக்க முடிய வில்லை. அந்த கட்சியில் ஒழுங்கு இல்லை.

இதையே நாங்கள் செய்திருந்தால், அவர்கள் எங்களுக்கு எதிராகவும் மக்களை தவறாக வழி நடத்தியும் என்ன மாதிரியான குற்றச்சாட்டுகளை வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் வாக்குகளை பிளவுபடுத்தி யுள்ளனர். எனினும் புதிய அரசுக்கு நாங்கள் ஒத்துழைப்பு கொடுப்போம்’ என்று பேசினார்.

No comments:

Post a Comment