விரைவில் கூடும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

விரைவில் கூடும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை

புதுடில்லி, டிச. 10- இந்தியா கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் தொகுதி பங் கீடு விவகாரம் முக்கிய மாக விவாதிக்கப்படும் என டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை இணைந்து சந்திக்கும் நோக்கில் காங்கிரஸ் உள் ளிட்ட 25-க்கு மேற்பட்ட எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என்ற பெயரில் ஓரணியில் திரண்டு உள்ளன.

இந்த கூட்டணியின் தலைவர்கள் 3 முறை அடுத்தடுத்து சந்தித்து தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதித்து இருந் தனர். அத்துடன் கூட் டணி சார்பில் அமைக்கப் பட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டமும் நடை பெற்றது.

இதற்கிடையே 5 மாநி லத் தேர்தல் நடைபெற் றதால் காங்கிரஸ் உள் ளிட்ட சில கூட்டணி கட்சிகள் அந்த தேர்தலில் மும்முரமாக இறங்கின. இதனால் இந்தியா கூட் டணியின் அடுத்த சந்திப் புகள் நடைபெறாமல் இருந்தன.

தற்போது 5 மாநில தேர்தல் முடிவடைந் துள்ள நிலையில், மீண் டும் இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட் டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் கடந்த 6ஆம் தேதி நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டு, பின்னர் தள்ளி வைக்கப் பட்டது.
இதைத்தொடர்ந்து வருகிற 17 முதல் 20ஆம் தேதிக்குள் இந்த கூட் டணி கூட்டம் நடைபெ றும் என எதிர்பார்க்கப்படு கிறது. இதற்கான ஏற்பாடு களை கூட்டணி தலை வர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங் கீட்டை எவ்வாறு மேற் கொள்வது? என்பது குறித்து முக்கியமாக ஆலோசனை நடத்தப் படும் என டில்லி வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விவகாரமே வரு கிற கூட்டத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக இருக் கும் என்றும் அந்த வட் டாரங்கள் கூறியுள்ளன. தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சி கள் கடைப்பிடிக்க வேண் டிய உத்திகள் குறித்து ஆலோசிப்பதற்காக இந் தியா கூட்டணி கட்சிக ளின் நாடாளுமன்றக் குழு தலைவர்கள் கடந்த 4ஆம் தேதி சந்தித்தனர்.

அப்போது நாடாளு மன்ற தேர்தலின் தொகுதி பங்கீடு விவகாரத்தை திரி ணாமுல் காங்கிரஸ் தலை வர்கள் அந்த கூட்டத்தி லும் எழுப்பி இருந்தனர். இதனால் வருகிற இந் தியா கூட்டணி தலைவர்க ளின் சந்திப்பில் இந்த விவகாரம் குறித்து விரி வாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகி றது.

No comments:

Post a Comment