சிதம்பரம், டிச. 12- சிதம்பரம் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவரும், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியருமான கோ.நெடுமாறன் எழுதிய ‘தெருக்குரல்’, ‘வெற்றியை நோக்கி’ ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு விழா 3.12.2023 ஞாயிறு அன்று, புவனகிரி தேவாங்கர் மண்டபத்தில் மாவட்ட கழகத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் சேரமான் வரவேற்பு ரையாற்ற, சு.சண்முகம் கவிஞர் செ.குருநாதன் முன்னிலை யேற்றனர்.
‘தெருக்குரல்’ நூலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழ கிரி வெளியிட, மா.செந்தில்வேலன் பெற்றுக்கொண்டார். ‘வெற்றியை நோக்கி’ நூலை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் வெளியிட, தி.மு.க. மாநில பொறியாளர் அணி செயலாளரும், மேனாள் புவனகிரி சட்டமன்ற உறுப்பிருமான துரை.கி.சரவணன் பெற்றுக் கொண்டார்.
நூல்களை, அண்ணாமலைப் பல்கலைக்கழக இந்திய மொழிப் புல முதல்வர் முது முனைவர் அரங்க.பாரி அவர்களும், பாரதி மேல்நிலைப் பள்ளி தாளாளர் முனைவர் இரா.அன்பழகன் ஆகி யோரும் ஆய்வுரை செய்தனர்.
புலவர் த.செயராமன், கோ.வீர மணி, ந.முத்துக்குமாரசாமி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர்.
ஓய்வுபெற்ற தலைமையாசிரி யர்கள் இரா.இராசன், தி.பொன் னம்பலம், தருமர், பழனிசாமி, தி. வைத்திலிங்கம், ஆர்.கலைச்செல் வன், கோ.சுப்பிரமணியன், த.நகு லன், த.பாண்டித்துரை, மணிவண் ணன், நா.இராமானுசம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட இணைச் செயலாளர் யாழ்.திலீபன், மாவட்ட அமைப்பா ளர் கு.தென்னவன், பரங்கிப் பேட்டை ஒன்றிய செயலாளர் துரை.செயபால், புவனகிரி ஒன்றிய தலைவர் இராமதாஸ், வடலூர் நகரத் தலைவர் புலவர் இராவணன், மாவட்ட துணைச் செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். நூலாசிரியர் கோவி.நெடுமாறன் ஏற்புரை வழங்கினார். நூலாசிரியரின் துணைவியார் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் செந்தாமரை நன்றி கூறினார்.
மாவட்ட கழகம் சார்பில் நூலாசிரியருக்கு சிறப்பு செய்யப் பட்டது.
No comments:
Post a Comment