அ.தி.மு.க. ஆட்சியில் 2015இல் சென்னையில் நடந்தது என்ன?
2015 சென்னை பேரழிவு என்பது, 100 ஆண்டு களில் இல்லாத அளவு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை பேரழிவு ஆகும். 2015 ஆம் ஆண்டில், நவம்பர் மற்றும் டிசம்பரில், வடகிழக்கு பருவமழை காலத்தில் கடும் மழை பொழிந்து பேரழிவை ஏற்படுத்தியது. மழை நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கியது. இக் காலத்தில் பெய்த 3 பெருமழைகளின் காரணமாக சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இரண்டாவது, மூன்றாவது பெருமழைகளையடுத்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த பேரழிவின் விளைவாக சாலை களும், ரயில் தண்டவாளங்களும் சேதமடைந்தன.
தென்னிந்திய மாநிலங்களில் கோரமண்டல் கடற்கரைப் பகுதி, மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி ஒன்றியப் பகுதி , குறிப்பாக கடுமையாக சென்னை பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந் துள்ளதுடன் 18 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்தனர். இந்த மழையின் காரணம் எல் நீனோ என்ற புவியியல் மாற்றம் எனக் கூறப்பட்டது.
வெள்ளப் பெருக்கும்,
அவசரகால நிலையும்
மூன்றாவது பெருமழையால், நவம்பர் 30 அன்று இரவு முதல் டிசம்பர் 2 அதிகாலை வரை தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஏரிகளிலிருந்து நீர் பெருமளவு வெளியேற்றப்பட்டது. இதுதவிர ஏற்கெனவே நிரம்பிவிட்ட சிறு ஏரிகள் மற்றும் குளங்களிலிருந்து நீர் வெளியேறி நகரிலும், நகரின் சுற்றுப்புறப் பகுதி களிலும் வெள்ளம் ஏற்பட்டது. அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது.
மழையளவு
டிசம்பர் 1 – காலை 8.30 மணி முதல் டிசம்பர் 2 – காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர காலகட்டத்தில் பதிவான மழையளவுகள்:
தாம்பரம் = 49 செ. மீ
மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் = 35 செ. மீ
வட சென்னை = 29 செ. மீ
சேதங்கள் உயிரிழப்புகள்
மியாட் எனும் தனியார் மருத்துவ மனையில் வெண்டிலேட்டர் உதவி யுடன் சிகிச்சை பெற்றுவந்த 18 பேர் உயிரிழந்தனர். மின்சார இணைப்பு இல்லாத காரணத்தால் இந்த இழப்பு ஏற்பட்டதாக கருதப் படுகிறது.
தனி மனிதர்களுக்கு
ஏற்பட்ட சொத்து சேதங்கள்
குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினர் குடியிருந்த 50,000திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தின் காரணமாக பெரு மளவு சேதமடைந்ததாக சென்னை மாநக ராட்சி அலுவலர் தெரிவித்தார். இதுவொரு ஆரம்பநிலை கணக்கீடாகும்.
அடையாற்றில் வெள்ளம்
அடையாறு செம்பரம்பாக்கம் ஏரியில் தோன்று கிறது. டிசம்பர் முதல் வாரத்தில் 30 ஆயிரம் கன அடி நீர் செம்பரம்பாக்கம் அணையில் இருந்து அடை யாற்றில் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நீர் அடை யாற்றில் கடும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியது. ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்கள் தண்ணீருக்குள் மூழ்கின. இதனால் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன. தண்ணீருக்குள் மூழ்கிய பிரதான பாலங்கள் சைதாப்பேட்டை பாலம் மற்றும் ஈக்காட்டுத் தாங்கல் பாலம் ஆகியனவாகும். ஆற்றின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் நுழைந்தமையால் பல குடிசைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. மக்கள் பலர் தாங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அந்தப் பகுதியில் வாழும் மாணவர்கள் தங்கள் புத்தகங்களை இழந்தனர். வெள்ளம் வந்த பின்னர் நெகிழிப் பொருள்கள் எங்கும் சிதறிக் கிடந்தன. இந்த நிகழ்வு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை ஏற்படுத்தியது.
கூவம் ஆற்றில் வெள்ளம்
ஆவடி அருகே வேகமான நீர் ஓட்டம் காரணமாக பாலம் ஒன்று உடைந்தது. தரை பாலங்கள் பல மூழ்கின.
நீரில் சுரங்கப் பாதைகள் மூழ்கியதால்,அதனூடான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன.
நீரில் மூழ்கிய சுரங்கப் பாதைகள்:
தியாகராயர்நகர் சுரங்கப்பாதை
கிண்டி சுரங்கப்பாதை
நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை
வெள்ளம் காரணமாக பல சாலைகளைப் பயன் படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
தொடர்வண்டிப் போக்குவரத்து நிறுத்தம்
தொடர்வண்டித் தடங்கள் சேதமடைந்தமையால், தொடர்வண்டி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப் பட்டன. சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து எல்லா தொடர்வண்டிகளும் டிசம்பர் 1 முதல் இரத்து செய்யப்பட்டு, பின்னர் டிசம்பர் 7 முதல் வழமைக்குத் திரும்பியது. டிசம்பர் 5 நள்ளிரவு முதல் எழும்பூர் தொடர்வண்டி நிலையத்திலும், சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திலும் வழக்கமான சேவை நடைமுறைப்படுத்தப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்தது.
விமான போக்குவரத்து நிறுத்தம்
ஓடு பாதை வெள்ளம் காரணமாக விமான சேவை 2015 டிசம்பர் 2 முதல், டிசம்பர் 7 வரை நிறுத்தி வைக்கப் பட்டது.
அரக்கோணம் கடற்படை விமானத் தளத்தைப் பயணிகள் பொது விமான நிலையமாக தற்காலிகமாகப் பயன்படுத்தப்பட்டது. டிசம்பர் 6 இல் இருந்து உள் நாட்டு விமான சேவையும், டிசம்பர் 7 முதல் பன் னாட்டு விமான சேவையும் மீண்டும் தொடங்கியது. டிசம்பர் 6 வரை வானூர்தி நிலையம் மூடப்பட்டது. ஓடுபாதையில் தேங்கியிருந்த தண்ணீர் முழுவதுமாக டிசம்பர் 5 அன்று நீக்கப்பட்டது. இதற்காக 20 மோட் டார் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. நிலையத் தில் ஏற்கெனவே தங்கியிருந்த 22 வானூர்திகளின் புறப்பாடு மட்டும் டிசம்பர் 5 முதல் அனுமதிக்கப்பட்டது.
மின்சாரம், தொலைதொடர்பு சேவை துண்டிப்பு
நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெள்ளம் காரணமாக மின் வெட்டு ஆரம்பித்தது. பின்னர் டிசம்பர் முதல் வாரத்தில்ருந்து பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு இருந்தது. அதனால் ஒளிரும் சென்னை ,இருளில் மூழ்கியது.
தொலைத்தொடர்புச் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. இணைய இணைப்புகள் பாதிக்கப்பட்டன.தொழில் நுட்பப் பிரச்சினைகள் காரணமாக தொலைப் பேசி கோபுரங்கள் பல செயல் இழந்திருந்தன. எனவே தொலைப்பேசி மற்றும் செல்லிடத் தொலைப்பேசிகள் செயலிழந்தன. சென்னை வாழ் மக்கள் மற்ற இடங் களில் இருக்கும் தம் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாதிருந்தது. பி.எஸ்.என்.எல் ஒரு வார காலத்திற்கு இலவச இணையத்தளச் சேவை மற்றும் வெளிச்செல்லும் அழைப்புகளை அறிவித்தது.
பற்றாக்குறையும், விலைவாசியும்
வெள்ளத்தையடுத்து, அடிப்படைத் தேவை களான பால், தண்ணீர், காய்கறிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அரை லிட்டர் பால் 100 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இது வழக்கமான விலையை விட 5 மடங்கு அதிகமாகும். தண்ணீர் பாட்டில்கள், கேன்கள் 100 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டன.
எரிபொருள் கிடைப்பது சிரமமானது.
வானூர்திக் கட்டணங்கள் 10 மடங்கு உயர்ந்தன
செய்தி நாளேடுகளும், ஒளிபரப்புப் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
2015 டிசம்பர் 2 அன்று காலையில் தி இந்து நாளிதழ் வெளியாகவில்லை. டிசம்பர் 1 அன்று இரவில், மறைமலைநகரில் உள்ள அச்சகத்தில் வெள்ள நீர் புகுந்ததையடுத்து இந்நிறுவனத்தின் பத்திரிகைகள் அச்சாகவில்லை.
ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் அமைந்திருந்த புதிய தலைமுறை, ஜெயா தொலைக்காட்சி, மெகா தொலைக்காட்சி போன்ற ஒளிபரப்புப் சேவை நிலையங்களில் வெள்ள நீர் புகுந்ததையடுத்து, அவற்றின் ஒளிபரப்புகள் நிறுத்தப்பட்டன.
விடுமுறைகள்
நவம்பர் 8 முதல் டிசம்பர் 13 வரை சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சி யர்கள் விடுமுறையை அறிவித்தனர்.
ஒரு மாதத்திற்கும் மேலாக மாணவர்கள் விடு முறையில் இருந்தனர். எனவே அவர்களது கல்வி பாதிப்படைந்தது. அவர்களின் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படன.
டிசம்பர் 3 மற்றும் 4 அன்று அரசாங்கம் அனைத்து நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை அறிவித்தது. எனவே மக்கள் தத்தமது சொந்த ஊருக்குச் சென்றனர்.
முக்கிய சாலையில் பள்ளம்
2015 டிசம்பர் 1ஆம் தேதி அன்று முக்கிய சாலை யான மத்திய கைலாஷ் போக்குவரத்து விளக்கு அரு கில் திடீரென ஒரு பள்ளம் தோன்றியதனால், போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.
மீட்புப்பணிகள்
டிசம்பர் 5 மாலை வரை 16,000 பேர் மீட்கப்பட்டனர். 21 அதிகாரிகள் உள்ளிட்ட 1600 வீரர்கள் (50 குழுக்கள்), 200 படகுகளின் மூலமாக இப்பணிகளைச் செய்தனர்.
டிசம்பர் 3 அன்று மாநில முதலமைச்சர் ஜெயலலிதாவும், பிரதமர் நரேந்திர மோடியும் ஹெலிகாப்டர் மூலமாக வெள்ளச் சேதங்களை தனித்தனியே பார் வையிட்டனர்.
டிசம்பர் 5 முதல் டிசம்பர் 8 வரையிலான 4 நாட்களுக்கு சென்னை நகரப் பேருந் துகளில் பொதுமக்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என மாநில அரசு அறிவித்தது.
தாம்பரம் பகுதியில் வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்ததையடுத்து, ஹெலிகாப்டர்கள் மூலமாக உதவிகள் வழங்கப்பட்டன
மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலமாக மக்கள் மீட்கப்பட்டனர்.
தாம்பரத்திற்கு அருகேயுள்ள இராசகீழ்ப்பாக்கம், சேலையூர் குளங்களை தீய எண்ணம் கொண்டோர் சேதப் படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
சென்னையின் பல பகுதிகளில் பாது காப்பு நலன் கருதி மின்சாரம் துண்டிக்கப் பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை, மருத்துவ சிகிச்சைகளை பல்வேறு தரப்பினர் வழங்கினர். சென்னையின் சில இடங்களில் கட்டடங் களின் கீழ்தளம், முதல் மாடி வரை தண்ணீர் புகுந்த தால், நிலைமையை சமாளிக்க இராணுவ உதவி கோரப்பட்டு மக்கள் மீட்கப்பட்டனர். அரசின் வேண்டுகோளுக்கிணங்க மீனவர்கள் தங்களது படகுகளை பயன்படுத்தி பொதுமக்களுக்கு உதவினர். சில தொண்டு நிறுவனங்களும், தனியார் வாடகை தானுந்து நிறுவனங்களும் படகுகளைப் பயன்படுத்தி இலவசமாக உதவினர். சமூக வலைதளங்களில் சென்னை நகரில் ஓடும் படகுகளை வெனிஸ் நகரோடு ஒப்பிட்டனர்.
நிவாரண உதவிகள்
மழையினால் உயிரிழந்தவர்களின் குடும்பங் களுக்கு தமிழ்நாடு அரசு 4 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கியது. தமிழ்நாடு அரசின் மழை நிவாரண உதவிக்காக திமுகவின் சார்பில் ஒரு கோடி ரூபாயை அக்கட்சி வழங்கியது.
முறைப்படுத்தப்படாத நகரமயமாக்கலே சென் னையில் ஏற்பட்ட வெள்ள இடர்களுக்கு காரணமென அறிவியல், சுற்றுப்புறச் சூழலுக்கான நடுவம் (இந்தியா) கருத்து வெளியிட்டது.
ஆய்வறிக்கைகள்
நீர்சேமிப்பு நிலங்கள், திறந்தவெளிகள், வெள்ள வடிகால் நிலங்கள் ஆகியவை கட்டடங்களால் பெரு மளவு குறைந்து, சென்னைக்கு பாதிப்புகள் உண்டாகி யதாக இந்திய அறிவியற் கழகத்தின் (பெங்களூரு) ஆய்வறிக்கை தெரிவித்தது.
2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட பேரழி வுக்குக் காரணம் “செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இரவோடு இரவாகத் தண்ணீரைத் திறந்துவிட்டதுதான் வெள்ளத்துக்குக் காரணம்” என்பதை தலைமைக் கணக்காயர் மற்றும் தணிக்கையாளரின் (சிஏஜி) 2016 மார்ச் மாத அறிக்கை குறிப்பிட்டது.
– இணையதளத்திலிருந்து…
No comments:
Post a Comment