பொன்பரப்பி, டிச.7- பள்ளி கல்வித்துறை சார்பில் அரியலூர் வருவாய் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகள் 24.11.2023 அன்று பொன்பரப்பியில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடை பெற்றது.
போட்டிகள் 14, 17 மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு அலங்கார வீச்சு மற்றும் பல்வேறு எடைப் பிரிவுகளில் கம்பு தொடுத்திறன் போட்டி நடைபெற்றது.
அதில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவ – மாணவிகள் கலந்துகொண்டு 14 வயதிற்குட்பட்ட பிரிவில் 30 கிலோ எடைப் பிரிவில் பரசுராம் மூன்றாம் இடத்தையும், 40 கிலோ எடைப் பிரிவில் ருவ னேஷ் முதலிடத்தையும், 40 கிலோ வுக்கு மேல் பிரிவில் ரமணா மூன் றாம் இடத்தையும், இரட்டைக் கம்பு வீச்சில் அஜய் மூன்றாம் இடத்தையும், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் 30 கிலோ எடைப் பிரிவில் ரித்திகா மற்றும் சரண் தேவ் இரண் டாம் இடத்தையும், 35 கிலோ எடைப் பிரிவில் சஞ்சய் மூன்றாம் இடத்தையும், 40 கிலோ எடைப் பிரிவில் துளசி மணி முதல் இடத் தையும் ஒற்றைக்கம்பு வீச்சில் கிரு பாகரன் இரண்டாம் இடத்தையும், அட்சய கண்மணி மூன்றாம் இடத்தையும், இரட்டைக் கம்பு வீச்சில் தருனேஷ் மூன்றாம் இடத் தையும், 19 வயதுக்குட்பட்ட 55 கிலோ எடைப் பிரிவில் பாலாஜி, செல்வ பிரியா இரண்டாம் இடத் தையும், 70 கிலோ எடைப் பிரிவில் தர்ஷினி முதலிடத்தையும், ஒற் றைப் கம்பு வீச்சில் புவனேஸ்வரன் இரண்டாம் இடத்தையும், பிடித்து வெற்றி பெற்றனர். முதலிடம் பிடித்த தர்ஷினி, துளசி மணி மற்றும் ருவ னேஷ் ஆகியோர் மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த சிலம்பம் ஆசிரியர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள் ஆகியோரை பள்ளி தாளாளர், முதல்வர், இருப்பால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment