'நீட்'டின் கொடுங்கரம்! பெட்ரோல் ஊற்றி மாணவர் தற்கொலை முயற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

'நீட்'டின் கொடுங்கரம்! பெட்ரோல் ஊற்றி மாணவர் தற்கொலை முயற்சி

கோவை,டிச.23- நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாண வர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். படு காயம் அடைந்த அவருக்கு மருத் துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன். எல்.அய்.சி. முகவர். இவருடைய மனைவி சாந்தா. இவர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக பணி யாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் ஆகாஷ்சிறீ ( வயது19)
பிளஸ்-2 முடித்த இவர் மருத்து வருக்கு படிக்க முடிவு செய்தார். இதனால் அவரை பெற்றோர் கோவையை அடுத்த நீலாம்பூரில் உள்ள தனியார் நீட் அகாடமியில் சேர்த்தனர். அவர், அங்குள்ள விடுதியில் தங்கி நீட் தேர்வுக்காக படித்து வருகிறார்.

அவர், கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அவர் தேர்ச்சி பெறாததால் அங்கு தொடர்ந்து படித்து வந்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டும் அவர் நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் 453 மதிப்பெண் எடுத் ததாக கூறப்படுகிறது. குறைவான மதிப்பெண் எடுத்ததை வீட்டில் கூறினால் பெற்றோர் தன்னை திட் டுவார்கள் என்று நினைத்தார் இத னால் ஆகாஷ்சிறீ . வேறொரு மாண வரின் அய்.டி. எண்ணை தனது பெற் றோரிடம் கொடுத்து, தான் நீட் தேர்வில் 600 மதிப்பெண் எடுத்து இந்த முறை தேர்ச்சி பெற்று விட்டதாக கூறினார்.

இதையடுத்து மருத்துவ படிப் புக்கு விண்ணப்பித்தும் ஆகாஷ் சிறீக்கு இடம் கிடைக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர், மகன் படிக்கும் அகாடமியை தொடர்பு கொண்டு பேசினர். அதற்கு அவர் கள், ஆகாஷ்சிறீ குறைவான மதிப் பெண் எடுத்ததால்தான் இடம் கிடைக்கவில்லை என்று கூறி உள் ளனர். தான் பொய்சொல்லி பெற் றோரிடம் சிக்கி கொண்டோமே என பயந்து விடுதி அறைக்கு சென்ற ஆகாஷ்சிறீ, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

உடனே விடுதி முன்பு நின்ற மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு பாட்டிலில் பெட் ரோலை பிடித்தார். பின்னர் அவர் விடுதி யின் கழிப்பறைக்கு சென்று பாட்டி லில் இருந்த பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண் டார். இதனால் உடலில் தீப்பற்றி எரிந்ததால் வலிதாங்க முடியாமல் அவர் அலறித் துடித்து கூச்சலிட டார்.

உடனே அந்த விடுதியில் இருந்த சக மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் கழிப்பறையின் கதவை உடைத்து உள்ளே படுகாயத்துடன் உயி ருக்கு போராடிக்கொண்டு இருந்த ஆகாஷ்சிறீயை மீட்டு கோவை தனி யார் மருத்துவமனையில் அனுமதித் தனர்.அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்

இது குறித்த புகாரின்பேரில் சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment