சென்னை, டிச.3 தொழில் அதிபர்களை மிரட்டி ஜிஎஸ்டி அதிகாரிகள் கோடிக் கணக்கில் பணம் பறிப்பதாக தமிழ்நாடு காவல்துறைக்குத் தகவல் கிடைத் துள்ளது. இதனால் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்வது குறித்து அதி காரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். அதேபோல அமலாக்கத் துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் பெயரைச் சொல்லியும் மிரட்டி பாஜக நிர்வாகிகளும் பணம் பறித்துள்ளதாக காவல்துறைக்குப் புகார்கள் குவிந்து வருகின்றன.
லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை தமிழ்நாடு காவல்துறை யினர் முதல் முறையாக அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால் அம லாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டிய போதெல்லாம் பயந்திருந்த தமிழ்நாட்டு தொழில் அதிபர்கள், அரசு அதிகாரிகள் தற்போது தைரியமாகப் புகார் கொடுக்க முன் வந்து தகவல்களை அலைபேசி மூலம் தெரிவித்து வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் ஜிஎஸ்டி துறையில் சென்னையில் பணியாற்றிய ஒரு அதிகாரி ஒருவர், ஒரு தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க அவரை மிரட்டி, கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அடித்து, உதைத்து பல கோடி ரூபாய் பணம் பறித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர், ஒன்றிய அரசிடம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து அந்த அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், மேற்கு வங்கத்துக்கு மாற்றி உத்தரவிடப்பட் டுள்ளது.
தொழில் அதிபர் தவறு செய்திருந் தால் கைது செய்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல், சட்டவிரோதமாக கிழக்கு கடற்கரைச் சாலைக்கு கடத்திச் சென்று பண்ணை வீட்டில் அடைத்து வைத்து, தாக்குதல் நடத்தி, பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இது மிகப் பெரிய கிரிமினல் குற்றம். ஒன்றிய அரசின் அதிகாரிகள் என்ன செய்தாலும் கேள்வி கேட்க முடியாது என்ற நினைப்பில் தொழில் அதிபர்கள் பயந்து போயிருந்தனர். தற்போது இதுபோன்ற புகார்கள் தமிழ்நாட்டு காவல்துறைக்கு வரத் தொடங்கியுள்ளது.
No comments:
Post a Comment