புதுடில்லி, டிச. 7- பாதாளச் சாக் கடை மற்றும் கழிவுநீர் தொட்டிகளைப் பாதுகாப்பற்ற முறையில் கையால் சுத்தம் செய்யும் பணியின் போது 2023ஆம் ஆண்டில் நவ. 20ஆ-ம் தேதி வரையில் 49 பேர் உயிரிந்துள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு 5.12.2023 அன்று தெரிவித்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் நாடாளு மன்ற உறுப்பினர் அபரூபா போட்டார்-. கழிவுகளைக் கையால் சுத்தம் செய்தல், கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணிகளின் போது நிகழ்ந்த உயிரிழப்புகளைத் தடுக்க மனிதர்களைக் கொண்டு கழிவு களை சுத்தம் செய்யப்போவதில்லை என்ற திட்டம் எந்த நிலையில் உள்ளது என மக்களவையில் கேள்விகள் எழுப்பி இருந்தார்.
இதற்கு சமூக நீதி மற்றும் அதி காரமளித்தல் துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் அளித்து பேசுகையில், ”கடந்த 2018ஆ-ம் ஆண்டு முதல் ஆபத்தான முறையில் பாதாளச் சாக்கடை மற்றும் கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியின் போது 443 பேர் உயி ரிழந்துள்ளனர்.
இந்தாண்டு (2023) நவ.20ஆம் தேதி வரை 49 பேர் உயிரிழந்துள் ளனர். இதில் அதிகபட்சமாக ராஜஸ் தான் மாநிலத்தில் 10 பேரும், குஜ ராத்தில் 9 பேரும், தமிழ்நாட்டில் 7 பேரும், மகாராட்டிராவில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் கழிவு களை அகற்ற இயந்திரங்களைப் பயன்படுத்துவது பற்றிய தரவுகள் ஏதும் இல்லை” என்று தெரிவித் தார். கழிவுநீர் சுத்தம் செய்யும் பணிகளுக்கு இயந்திரங்களை அறி முகம் செய்யப்போவதாக மேற்கு வங்கம், கேரளா, மகாராட்டிரா மாநில அதிகாரிகள் அறிவித்தி ருக்கும் நிலையில், ஒன்றிய அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆ-ம் ஆண்டு ’தி இந்து’ நாளிதழ் வெளியிட்ட செய்தியின் படி, ஏற்கெனவே கழிவுகளை சுத்தம் செய்யும் பணியாளர்களைப் பற்றி நாடுதழுவிய அளவில் கணக் கெடுக்கும் பணியினை ஒன்றிய அரசு கணக்கில் எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு தற் போது கடந்த 2018ஆம் ஆண்டு தூய்மைப் பணியாளர்களைப் பற்றி எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப் படையிலேயே செயல்பட்டு வருகிறது. அதன்படி, சுமார் 58,000 தூய்மைப் பணியாளர்கள் தங்க ளின் மறுவாழ்வு திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவானது, இன்னும் பல இடங்களில் மனிதர் களைக் கொண்டு கழிவுகளைச் சுத்தம் செய்யும் வழக்கம் உள்ளது என்று சமூக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, 766 மாவட்டங்க ளில், 716 மாவட்டங்கள் கழிவுகளை சுத்தம் செய்யும் பணிக்கு மனிதர் களை ஈடுபடுத்துவதில்லை என்று அறிவித்துள்ளன.
அவ்வாறு அறிவிக்காத மீதமி ருக்கும் மாவட்டங்களில் இருக் கின்ற சுகாதார மற்ற கழிவறைகள் பற்றி அறிக்கை அளிக்கும்படி வலியுறுத்தப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், கழிவுகளை அகற்ற மனிதர்கள் பயன்படுத்தப்பட வில்லை என்ற சுயஅறிவிப்பும், அந்த மாவட்டங்களில் சுகாதார மற்ற கழிப்பறைகளின் எண்ணிக் கையை பொறுத்தே தீர்மானிக்கப் படுகிறது. அந்த மாவட்டத்தில் சுகாதாரமற்ற கழிப்பறைகள் இல்லை என்றால் அங்கு கழிவு களை கையால் சுத்தம் செய்யும் பணியாளர்கள் இல்லை என்று பொருள் என மூத்த சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment