பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “பெரியார் எப்படிப் பெரியார்” நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 13, 2023

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “பெரியார் எப்படிப் பெரியார்” நூல் வெளியீட்டு விழா

featured image

சென்னை, டிச. 13- பகுத்தறிவாளர் கழகம் நடத்திய தோழர் வெற்றிச் செல்வன் எழுதிய “பெரியார் எப்படிப் பெரியார்” என்ற நூல் வெளியீட்டுவிழா சென்னை பெரியார் திடலில் அன்னை மணியம் மையார் அரங்கில் கடந்த 9.12.2023 அன்று மாலை 6 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் வேண்மாள் நன்னன் தலைமையில் புதியகுரல் நிறுவுநர் தோழர் ஓவியா நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
கவிஞர் கலைச்செல்வி புலியூர் கேசிகன் நூலைப் பெற்றுக் கொண்டார். திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டி யன் நூல் திறவுரை ஆற்றினார்.
வாழ்த்துரையையும் நிறைவுரை யையும் திராவிட இயக்கத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆற் றினார். வரவேற்புரையையும் இணைப் புரையையும் தோழர் இராசிலாதேவி ஆற்றினார். தோழர் த.மகரகதமணி நன்றி கூறினார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், புலவர் வீரமணி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

தலைமை உரை
வேண்மாள் நன்னன் தமது தலைமை உரையில், தந்தை பெரியார் பெண்கள் தம் உரிமைகளை உணரு மாறுச் செய்வதும், அதை இந்த சமு தாயம் ஏற்றுக் கொள்ளுமாறு செய்வ தையும் தம்முடைய தலையாய பணி களாக அமைத்துக் கொண்டார். பெண்களின் பகுத்தறிவு வளர்ச்சிக்கும் தன் மானத்துக்கும் உள்ள தடைகளைத் தகர்த்து பெண்களுக்கு இடப்பட்ட விலங்குகளை ஒடித்து கல்வி உரிமை, சொத்துரிமை, மறுமண உரிமை மண விலக்கு பெறும் உரிமை பொருளாதார உரிமை போன்றவற்றை பெறுவதே, உண்மையான பெண் விடுதலை என்று பேசினார். 13.11.1938இல் நடைபெற்ற பெண்கள் மாநாடு பற்றியும் அதில் நிறைவேற்றப்பட்ட பெரியாரைப் பெரியார் என்ற சிறப்பு பெயராலேயே வழங்குதல் வேண்டும் என்ற தீர்மானம் பற்றியும் கூறினார்.

சிறப்புரை
சிறப்புரை ஆற்றிய ஓவியா அவர்கள், பெரியார் எப்படிப் பெரியார் என்ற நூலில் இடம் பெற்றுள்ள பெண்கள் மாநாடு எத்தகைய வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்பதை பதிவு செய்ய வேண்டியது மிகவும் தேவையானது. வரலாற்றை திரித்து எழுதுவதும் இருட்டடிப்பு செய்வதும் திராவிட இயக்க எதிரிகளுக்கு வாழ்நாள் ஆயுதம் – நம் இன எதிரிகள் கூச்சமில்லால் பொய் சொல்லக் கூடியவர்கள் – நாம் உண்மையைக் கூட ஆதாரத்தோடு தான் விளக்குவோம் – இதுதான் நமக்கும் நம் எதிரிகளுக்கும் உள்ள வேறுபாடு. இந்த மாநாடு பற்றிய அடிப்படை செய்திகளைக் கவிஞர் கலி.பூங்குன்றன் ஞாயிறு மலரில் எழுதிய ஒரு கட்டு ரையை படித்து தான் தாம் தெரிந்து கொண்டதாக ஓவியா கூறினார். மேலும் வெளியிடப்பட்ட நூலில் பெண்கள் மாநாடு பற்றிய செய்திகளை ஓர் ஆவணமாக தொகுத்து தந்துள்ளார் தோழர் வெற்றிச் செல்வன் என்று பாராட்டினார்
கவிஞர் கலைச்செல்வி தம்முடைய பாட்டி நீலாம்பிகை அம்மையார் தலைமையேற்று நடத்திய பெண்கள் மாநாடு பற்றிய நூலை தொகுத்தளித்த வெற்றிச் செல்வனை பாராட்டினார்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நூல் திறவுரை ஆற்றும்போது “பெண் களே பொது வாழ்வுக்கு வாருங்கள் பெண்களே பேரராட வாருங்கள்” என்று அழைப்பது தான் இந்த புத்த கத்தின் சாரம்.
தந்தை பெரியார் அன்றே சொன்ன படி, ஒரு பெண் கேள்விகேட்டால் நாடாளுமன்றமே நடுங்குகிறது. நாடாளுமன்றத்தை கலக்கிய மகுவா மொய்த்ரா தந்தை பெரியாரின் பெயர்த்தி தான் என்றார். சிவபெருமான் உடம்பில் பாதியை பெண்ணுக்குக் கொடுத்தார் என்கிறார்கள். உடம்பில் பாதியை எல்லாம் கொடுக்க வேண்டம். சொத்தில் பாதியை கொடு என்றார் பெரியார் எதை கொடுக்க முடியுமோ அதைக் கொடு என்றார்.
எவன் ஒருவன் உண்மையைக் கூட ஆதாரத்துடன் சொல்கிறான் என்றால் அவன் கருப்புச் சட்டை போட்டாலும் போடாவிட்டாலும் சுயமரியாதைக் காரன். எவன் ஒருவன் கூச்சப்படாமல் பொய் பேசுகிறான் என்றால் அவன் பூணூல் போட்டாலும் போடாவிட் டலும் அவாள்தான் என்று பேசினார். மேலும் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய வாழ்த்துரையில் செய்ய வேண்டிய அரும்பணியை செம்மையாக செய்த வெற்றிச் செல்வனின் ஆய்வுக்கும் ஆவணமாக்கிய அருந்தொண்டிற்கும் நமது வாழ்த்தும் பாராட்டும் என்று எழுதி உள்ளார், என்றும் கூறினார்.

கவிஞர் கலி.பூங்குன்றன்
நிறைவுரை ஆற்றிய கவிஞர் கலி.பூங் குன்றன் தந்தை பெரியாரின் பெண்ணு ரிமை போராட்டங்கள் பற்றியும் பெண் கள் மாநாட்டின் சிறப்புகள் பற்றியும் தொகுத்து. வழங்கினார். திராவிடத் கழகத் தொண்டர்கள் தங்களுடைய எந்த பிரச்சினை என்றாலும் பெரியா ரைச் சந்தித்து தம் தனிப்பட்ட குறைக ளைச் சொல்வார்கள். பெரியாரும் அவற்றை எல்லாம் பொறுமையாகக் கேட்டு தீர்வு சொல்வார் என்று பேசினர்.
பெண்களுக்குத் தாலி கட்டுவது நாய்களுக்கு லைசன்சு போடுவது என்று திருமண வீடுகளில் பேசுவார். ஒரு திருமண வீட்டில் தந்தை பெரியா ரின் பேச்சைக் கேட்ட மணமகள் தனக்குக் கட்டப்பட்ட தாலியைத் தூக்கி எறிந்தார் என்றும் கூறினார்.
‘நூல்’களின் ஆதிக்கத்தை ஒழிப்ப தற்கு இத்தகையை நூல்கள் வெளிவர வேண்டும் என்று கூறினார்.
இறுதியாக மீனாம்பாள் சிவராசன் பற்றிக் கூறினார். அவருடைய இறுதி நாள்களில் நோய் வாய்ப்பட்டிருந்த நேரத்தில் நீதிக் கட்சி பவளவிழா மலர் தயாரித்த போது மீனாம்பாள் அம் மையாரிடம் நேர்காணல் எடுத்த செய் தியை தெரிவித்தார்.
தோழர் மரகதமணி நன்றி கூற கூட்டம் இனிதே முடிந்தது.

No comments:

Post a Comment