ஏன் ஏழுமலையான் காப்பாற்ற மாட்டானோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 21, 2023

ஏன் ஏழுமலையான் காப்பாற்ற மாட்டானோ!

featured image

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்
சிசிடிவி கேமரா பதிவில் உறுதி – கம்பு வழங்கி பக்தர்களை குழுவாக அனுப்புகின்றனர்

திருமலை,டிச.21- திருப்பதி மலைப் பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனால், பக்தர்களுக்கு மூங்கில் கம்பு கொடுக்கப்பட்டு 100 பேர் குழுவாக அனுப்பி வருகின்றனர். பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெரும்பாலான பக் தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப நடைபாதை வழியாக திருப் பதியில் இருந்து திருமலைக்கு செல்வது வழக்கம். அவ்வாறு செல்லக்கூடிய அலிபிரி மலைப் பாதையில் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே சிறுத்தைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. ஏற்கெனவே சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமியை அடித்து கொன்றது.

அதற்கு முன்பு ஒரு சிறுவன் படுகாயத்துடன் மீட்கப்பட்டான். இதனையடுத்து கூண்டுகள் வைத்து அடுத்தடுத்து 6 சிறுத்தைகள் பிடிக் கப்பட்டன. இதனால் கடந்த 3 மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி அருகே உள்ள நடைப்பாதை அருகே அடிக் கடி மீண்டும் சிறுத்தை நடமாடுவ தாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிசிடிவி கேம ராக்களை ஆய்வு செய்தபோது லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் அருகே சிறுத்தை நடமாடுவதை உறுதி செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் (19.12.2023)இரவு முதல் பக்தர்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட் டுள்ளன.
அதாவது பக்தர்கள் தனியாக செல்லக்கூடாது, குழுவாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள் ளது. அனைத்து பக்தர்களுக்கும் மீண்டும் மூங்கில் கம்பு கொடுக் கின்றனர்.

இதுதவிர 100 படிக்கட்டு களுக்கு ஒரு காவலர் மற்றும் வனத்துறையினர் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தி முகாமிட்டுள் ளனர். அவர்கள் பக்தர்கள் தனியாக செல்லாதபடி கண் காணித்து 100 பேர் குழுவாக அமைக்கும் பணியை மேற்கொண் டுள்ளனர். குறிப்பாக பக்தர்கள் யாரும் தனியாக செல்ல வேண் டாம், சிறுவர், சிறுமிகளை அழைத்துச்செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் எனவும், மலைப்பாதையில் வனத் துறையினர் மற்றும் காவலர் மைக் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment