புதுடில்லி, டிச. 27 அயோத்தி ராமர் கோவில் நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி பங்கேற் காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கூறப்பட்டிருப்பதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு ஓர் அழைப்பிதழை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி பெற்றுள் ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை என்பது மத நம்பிக்கை களை மதித்திட வேண்டும் என்பதும், ஒவ்வொரு தனி நபருக்கும் அவர்தம் மத நம்பிக்கைகளைப் பின்பற்றிட உள்ள உரிமையைப் பாதுகாத்திட வேண்டும் என்பது மாகும். மதம் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட தேர்வு என்றும், அதனை அரசியல் ஆதாயத்திற்கான ஒரு கருவியாக மாற்றக்கூடாது என்றும் அது நம்புகிறது.
எனவே, இந்த வைபவத்தில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்.
ஒரு மதக் கொண்டாட்டத்தை, பிரதமர், உத்தரப்பிரதேச முதலமைச் சர் மற்றும் இதர அரசு அதிகாரிகள் நேரடியாகவே சம்பந்தப்பட்டு அதனை ஓர் அரசு நிகழ்ச்சியாக ஆர்எஸ்எஸ் / பாஜக மாற்றியிருப்பது மிகவும் கெட்ட வாய்ப்பாகும்.. உச்ச நீதிமன்றம் திரும்பத் திரும்ப வலி யுறுத்தியுள்ளது போன்று, இந்தியா வில் ஆட்சி அதிகாரத்தின் அடிப் படைக் கொள்கை, இந்தியாவில் அரச மைப்புச் சட்டத்தின் கீழ் அமைந்து ள்ள அரசு, எவ்விதமான மதத்தையும் சார்ந்து இருக்கக் கூடாது. இது ஆளும் தரப்பினரால் இந்த நிகழ்வில் மீறப் பட்டுக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக் குழு அறிக்கையில் கூறியுள்ளது
No comments:
Post a Comment