சட்டமும் மனிதனும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 30, 2023

சட்டமும் மனிதனும்

ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையில் எத்தனையோ சட்டங்களை மீற வேண்டியவனாகவே இருக்கிறான். சாதாரணமாக ஒருவனை ஒருவன் அடித்தால், வைதால் திருப்பியடிப்பதும், வைவதும் பெரும்பான்மையான மனித சுபாவமாயிருப்பதை நாம் காண்கிறோம். ஒருவனை ஒருவன் அடித்தால் சர்க்காரில் பிராது செய்து தண்டிக்க வேண்டியது சட்டமுறை. அச்சட்ட முறையை மீறினதாகுமல்லவா? ஆனால், மனித சுபாவம் எல்லாவற்றிற்கும் சட்டத்திற்கு அடங்கி நடக்க வேண்டுமென்பதை ஒப்புக் கொள்ள முடியாது. தன்னால் சாத்தியப்பட்டதற்கும், இழிவில்லாததற்கும் தான் நேரான மனிதன் அடங்கி நடக்க முடியும். மற்றவற்றை மீறத்தான் நேரிடும்.
(‘குடிஅரசு’, – 3.8.1930)

No comments:

Post a Comment