திருச்சி. டிச.23- திருச்சி மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆசி ரியைகள் அனைவரும் சுடிதார் அணிந்து வந்திருந்தனர்.
‘அரசுப்பள்ளி ஆசிரியைகள் சேலைக்கு பதிலாக சுடிதாரும் அணியலாம்’ என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பு ஆசிரியைகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் திருச்சி எட மலைப்பட்டி புதூரில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் 747 மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இங்கு 3 ஆசிரியர்களும், 18 ஆசிரியைகளும் பணியாற்றி வரு கிறார்கள். நேற்று (22.12.2023) பள்ளிக்கு 18 ஆசிரியைகளும் சுடி தார் அணிந்து மகிழ்ச்சியுடன் வந்திருந்தனர். அதுவும் சீருடை போல் ஒரே நிறத்தில், ஒரே டிசைனில் சுடிதார், துப்பட்டா அணிந்து இருந்தனர்.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியை புட்பலதா கூறியதாவது:-
பெண்களுக்கு கல்வியும் அதன் மூலம் கிடைக்கும் பொருளாதார வசதிகளால் மட்டுமே தன்னம் பிக்கை கிடைக்காது.
தன்னை கட்டுப்படுத்தும் ஆடையில் இருந்து வெளியில் வந்து விரும்பும் உடையை அணி யும்போதுதான் கட்டற்ற சுதந் திரத்தைஉணர்வார்கள். இந்த அறிவிப்பால் பள்ளி ஆசிரியைகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற் கெனவே, அரசாணை இருந்தா லும், ஆசிரியர்களிடையே குழப் பமும், எதிர்ப்பும் நிலவி வந்தது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சேலை கட்டிக்கொண்டு பள் ளிக்கு வந்து செல்வதில் நிறைய சிக்கல் இருக்கிறது. போக்குவரத்து நெரிசலில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் செல்லும்போது அடிக்கடி பிரேக் பிடிக்க வேண்டியிருக்கும். அப்படி பிரேக் பிடிக்கும்போது இடது காலை கீழே வைக்க வேண் டியிருக்கும். அப்போது, புடவை சிக்கி விபத்து ஏற்பட வாய்ப்புள் ளது.
அதேபோல், பேருந்துகளில் செல்லும்போது திடீரென்று சிலர் தெரியாமல் புடவையை மிதித்து விடுவார்கள்.
அப்போது, கீழே விழ வாய்ப்பு இருக்கிறது. தற்போது அந்த பிரச்சினை எல்லாம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment