விடுதலைச்சிறுத்தைகளின் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாடு தள்ளி வைப்பு தொல்.திருமாவளவன் அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 22, 2023

விடுதலைச்சிறுத்தைகளின் 'வெல்லும் ஜனநாயகம்' மாநாடு தள்ளி வைப்பு தொல்.திருமாவளவன் அறிவிப்பு

featured image

சென்னை, டிச.22 தென் மாவட்ட வெள்ளம் காரணமாக 29ஆ-ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த விசிக மாநாடு தள்ளிவைக்கப்படுவதாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 23.12.2023 அன்று திருச்சியில் ‘வெல்லும் ஜனநாயகம் மாநாடு’ நடைபெறுவதாக அறிவித்திருந்தோம். ஆனால், எதிர்பாராத வகையில் கடந்த 4.12.2023 தேதி அன்று சுழன்றடித்த கடும் புயல் மற்றும் கன மழையால், பெருக்கெடுத் தோடிய பெருவெள்ளத் தால், சென்னை உள் ளிட்ட பத்துக்கும் மேற் பட்ட வட மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப் பட்டன. அங்கே இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கே பல நாள்கள் தேவைபட் டன. இன்னும் பல இடங் களில் மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப இயலாத நிலையே நீடிக்கிறது.

எனவே, இக்கட்டான இந்த சூழலில் நமது மாநாட்டு தேதியை 29.12.2023 அன்று தேதி அன்று நடத்துவதாக மாற்றி அறிவித்தோம். அதனைத் தொடர்ந்து மாநாட்டுக்கான ஏற்பாடு களைத் தீவிரப்படுத்திக் கொண்டிருந்த வேளை யில், மீண்டும் நெஞ்சைப் பதறவைக்கும் வகையில் தென்மாவட்டங்களில் வானம் பிய்த்துக்கொண்டு கொட்டுவது போல் பெரு மழை கொட்டிவிட்டது. அதனால் நெல்லை, தூத் துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், தேனி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாகப் பாதிக் கப்பட்டிருக் கின்றன. இம்மழைக்குப் பலர் பலி யாகி இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்கள் தனித் தீவுகளாக மாறியுள்ளன. சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக் கப் பட்டிருக்கிறது. குடியிருப் புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருக்கிறது. பல வீடுகள் முற்றிலும் இடிந்து போய் உள்ளன சேதம டைந்துள்ளன. உணவுக் கும் குடிநீருக்கும் மக்கள் திண்டாடும் நிலை இருக் கிறது. ஏராளமானோர் ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள் ளனர். கடுந்துயரில் அவதி யுற்று வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகா ரிகள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இப்பணிகள் இன்னும் ஓரிரு வாரங்களுக்குத் தொடரும் நிலையே உள்ளது. இந்நிலையில், நமது கட்சியின் உயர் நிலைக் குழு உறுப்பினர் கள், மாவட்டச் செயலா ளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட முன்னணி பொறுப்பாளர்களுடன் இணையவழிக் கலந்தாய்வுக் கூட்டத்தில் மாநாட்டினை 2024 ஜன வரி மாதம் மூன்றாவது வாரத்திற்கு தள்ளி வைத்து நடத்தலாம் என கூறி யுள்ளனர். எனவே, ‘வெல் லும் ஜனநாயகம் மாநாடு’ ஜனவரி மாத இறுதியில் நடைபெறுமென அறிவிக் கப்படுகிறது. முதல மைச்சர் மற்றும் கட்சித் தலைவர்கள் ஆகிய அனைவரோடும் கலந்து பேசிய பின்னர் மாநாட் டுக்கான நாள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படு மெனவும் தெரிவிக்கப்படு கிறது அறிக்கையில் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment