சென்னை, டிச.21- -தென்னிந்தி யாவின் முன்னணி மசாலா தயா ரிப்பு நிறுவனமாகிய சக்தி மசாலா பிரைவேட் லிமிடெடின் இயக் குநர் டாக்டர் சாந்தி துரைசாமி, உலகளாவிய தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைப்பான டை (TiE) அமைப்பின் சென்னைக் கிளையால், இந்த ஆண்டின் சிறந்த டைகான் (TiECON) பெண் தொழில்முனைவர் விருதைப் பெற் றார்.
சமீபத்தில் சென்னையில் நடை பெற்ற இந்தியாவின் மிகப்பெரிய தொழில்முனைவர் கருத்தரங்கு களில் ஒன்றாகிய டைகானின் 16ஆவது கருத்தரங்கில் இந்த விருது வழங்கப்பட்டது.
டை சென்னை அமைப்பின் மேனாள் தலைவர் மற்றும் கவின் கேர் நிறுவனத்தின் தலைவர்
சி.கே.ரங்கநாதன், டை சென்னை யின் தலைவரும். இண்டக்ரா நிறு வனத்தின் நிறுவனருமான சிறீராம் சுப்ரமண்யா ஆகியோர் இவ்விரு தினை திருமதி சாந்தி துரைசாமிக்கு வழங்கினர்.
டைகான் 2023 விருதைப் பெறுவது குறித்து சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் சாந்தி துரைசாமி கூறுகையில், கிராமப்புற மக்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத் திறனா ளிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் நாங்கள் மிகுந்த திருப்தி அடைகிறோம். சக்தி மசாலா நிறுவனம் தரமான நியாய மான வணிக நடைமுறைகளை கடைப்பிடிக்கும் ஒரு நிறுவன மாகும்.
எங்கள் நிறுவன சமூகப் பொறுப்பின் வரம்பை மேலும் இவ்விருது விரிவுபடுத்தும் அதே வேளையில், தொழில் முன்னேற்றத் திற்கு நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்” என்றார்.
Thursday, December 21, 2023
தமிழ்நாட்டுப் பெண் தொழில் முனைவோருக்கு விருது
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment