சட்டம், அரசியல் சாசனத்தின் சேவகன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

சட்டம், அரசியல் சாசனத்தின் சேவகன் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

featured image

புதுடில்லி, டிச. 10 – ‘சட்டம் மற்றும் அரசியல் சாசனத் தின் சேவகன் நான். நீதி பதிக்கென வகுக்கப்பட் டுள்ள நடைமுறைகளைப் பின்பற்றியாக வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினார்.

உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு 8.12.2023 அன்று காலை விசாரணைக்காக கூடியவுடன், ஆஜரான வழக்குரைஞர் மேத்யூஸ் ஜெ.நெடும்பரா முறையீடு ஒன்றை முன்வைத்தார்.

அதாவது, ‘உச்சநீதி மன்ற மற்றும் உயர்நீதி மன்றங்களில் நீதிபதி களை நியமனம் செய்வ தற்கான பெயர்களை ஒன்றிய அரசுக்குப் பரிந் துரை செய்யும் கொலீஜி யம் நடைமுறையில் சீர் திருத்தம் மேற்கொள்ளப் பட வேண்டும். மூத்த வழக்குரைஞர் என்ற பத வியை ரத்து செய்ய வேண் டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, ‘ஒரு வழக்குரைஞராக உங்கள் மனம் விரும்புவதைக் கேட்கும் சுதந்திரம் உங்க ளுக்கு உள்ளது. அதே நேரம், தலைமை நீதிபதி யாக, சட்டம் மற்றும் அர சியல் சாசனத்தின் சேவ கன் நான். நீதிபதிக்கென வகுக்கப்பட்டுள்ள நடை முறைகளைப் பின்பற்றி யாக வேண்டும். விரும்பி யதைத்தான் செய்வேன் என்று ஒரு நீதிபதியாகக் கூற முடியாது’ என்றார்.

முன்னதாக, மூத்த வழக்குரைஞர் என்ற பதவியை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் மேத்யூஸ் நெடும்பரா உள்பட 8 பேர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த அக்டோ பரில் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதி மன்ற நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, ‘இந்த மனு தவ றான முன்னுதாரணமாக உள்ளது. மூத்த வழக்கு ரைஞர் பதவி என்பது வழக்குரைஞரின் அனு பவம் மற்றும் தகுதிக்கு நீதிமன்றம் கொடுக்கும் அங்கீகாரமாகும்’ என்று குறிப்பிட்டது.

No comments:

Post a Comment