சென்னை, டிச.7- சென்னையில் மழை வெள்ளம் சூழ்ந்த குடியி ருப்புகளில் சிக்கி தவிப்பவர்களுக்கு ஹெலிகாப் டர்களில் வந்த ராணுவத்தினர் உணவு பொட்டலங்களை வழங்கினர். காலை,மதியம் வேளைகளுக்கு உணவு கிடைத்ததில் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புறநகர் பகுதிகள்
சென்னையின் புறநகர் பகுதி களான தாம்பரம், முடிச்சூர். மண்ணிவாக்கம், பள்ளிக் கரணை, வேளச்சேரி, துரைப் பாக்கம், அம்பத்தூர், மணலி சுற்று வட்டாரப் பகுதிகளில் தேங்கிய மழை நீரை அப்புறப் படுத்தும் பணி ஒரு சில இடங்களில் தற்போதும் நடந்து வருகிறது.
ஒருசில பகுதிகளில் தன் னார்வலர்கள் பால்பாக்கெட், பால் பவுடர்கள், குடிநீர் பாட் டில்கள் மற்றும் காலையில் இட்லி, ரவா உப்புமா, மதியம் பிரிஞ்சி, தயிர் சாதம் உள்ளிட்ட வற்றை வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட பொது மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அதேபோல், பள்ளிக்கரணையில் உணவு பொட்டலங்களை பெற்றுக் கொண்ட பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறும் போது, ‘மழை வெள்ளத் தில் சிக்கித்தவிப்பது ஒரு புறம் இருந்தாலும், காலை, மாலை வேளைகளில் உணவு பொட் டலங்கள் ஹெலிகாப்டர்களில் வந்து தருவதோடு, படகுகளில் வந்து பால், குடிநீர் உள்ளிட்ட பொருட்களும் வழங்குகின்றனர்.
ஹெலிகாப்டர்களில் உணவு வினியோகம்
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறும் போது, ‘மிக்ஜாம் புயலால் ஏற் பட்ட சூறாவளி காற்று மற்றும் கனமழை தாக்கியதற்கு பிறகு சென்னையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தாம்பரம் விமா னப்படை நிலையத்தில் இருந்து தொடர்ந்து உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. வடசென்னை பகுதிக்கு 2 ஹெலிகாப்டர்களும், தென் சென்னை பகுதிக்கு 2 ஹெலிகாப்டர்களும் என மொத்தம் 4 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தென் சென்னையில் மேட வாக்கம் முதல் புழுதிவாக்கத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையம் வரை 8 இடங்களிலும், வட சென்னையில் 8 இடங்களிலும் மருந்து பொருட்கள் வழங்கப் பட்டன. கடுமையாக பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு இதுவரை சுமார் 400 கிலோ நிவாரணப் பொருட் கள் வினியோகிக்கப்பட் டுள்ளன’ என்றனர்.
இதுகுறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘மழை வெள்ளம் சூழ்ந்த குடியி ருப்புகளில் சிக்கி வீட்டை விட்டு வெளியேற முடியாதவர்களுக்கு சமைத்த உணவுகளை ஹெலி காப்டர்களில் தாழ்வாக பறந்து சென்று வீட்டு மொட்டை மாடிகளில் போடுவதால் உணவுகள் சிதறி வீணாகி விடும். இதனால் 5 ஆயிரம் உணவு பொட்டலங்களை வழங்கி உள் ளோம். மாடியில் தவிப்பவர்கள் அவற்றை பெற்றுக்கொண்டு தற்போதைய உணவு தேவையை பூர்த்தி செய்து கொண்டு நிலைமையை சமாளித்துகொள்ள முடியும்’ என்றனர்
உலர்ந்த திராட்சை
ஹெலிகாப்டர் மூலமாக வழங்கப்பட்ட பொட்டலத்தில் சமைத்த உணவுகளுக்கு பதிலாக பிஸ்கட், உலர்ந்த திராட்சை, பால் பவுடர், குடி நீர் பாட் டில்கள் மற்றும் சிறு உணவுப் பொருட்கள் இருந்தன.
இவை, காலை 9 மணியில் இருந்து 10 மணி வரையிலும், மதியம் 12 மணியில் இருந்து பகல் 1 மணி வரையிலும் வழங் கப்பட்டன. காலையில் 2 ஆயிரத்து 500 பொட்டலங்களும், மதியம் 2 ஆயிரத்து 500 பொட் டலங்களும் போடப்பட்டன என்று பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறினர்.
No comments:
Post a Comment