தமிழர் தலைவர் நூற்றாண்டு கண்டிட வாழ்த்துகிறோம் - வாழ்த்து பெறுகிறோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 2, 2023

தமிழர் தலைவர் நூற்றாண்டு கண்டிட வாழ்த்துகிறோம் - வாழ்த்து பெறுகிறோம்

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர் களுக்கு டிசம்பர் 2 - 2023 இன்று 91ஆவது பிறந்த நாளாகும். 

தமிழ்நாடு மட்டுமல்ல உலகம் முழு வதும் உள்ள சமூக நீதிப் போராளிகள் ஆசிரியர் அவர்களுடைய பிறந்த நாளினை கொண்டாடி மகிழ்ந்திட உள்ளார்கள் என்ற தகவலினை பெறுகிற போது நாமும் இனம் தெரியாத உணர்வில் நெகிழ்ந்து போகிறோம். 

ஒன்பது வயதில் பெரியார் அவர் களை சந்தித்து இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு மேடை ஏறியவர். 91 வயதிலும் தந்தை பெரியாரினுடைய சமூக நீதிக் கொள்கைகளை நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பரப்பி வருகிறார்கள். 

ஒன்றிய  அரசு தேசிய கல்விக் கொள் கையினை அறிவித்த போது நவீன குலக்கல்வித் திட்டமான இந்த தேசியக் கல்விக் கொள்கையினை ஒருபோதும் ஏற்கமாட்டோம் என வெகுண்டெழுந்து களத்தில் நின்று எதிர்த்து போராடியவர், இன்னமும் போராடி வருபவர். ஆசிரியர் இயக்கங்களை எல்லாம் ஒன்று சேர்த்து தேசியக் கல்விக் கொள்கையினுடைய பெருத்த பாதிப்புகளை எடுத்துக் கூறி தமிழ்நாட்டில் ஒருபோதும் தேசியக் கல்வி கொள்கையினை தலை காட்ட அனுமதிக்க கூடாது என்று நம்மையும் இணைத்துக் கொண்டு போராடிய வழிகாட்டி ஆவார்.

"விஸ்வகர்மா யோஜனா" என்ற குலக்கல்வி திட்டத்தினை பெற்றோர் தொழிலை பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்று மறைமுகமாக வலி யுறுத்திய போது அதனை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர். திராவிட மாடல் அரசில் திராவிடக் கொள்கையினை வலுப்படுத்துவதற்கு அவ்வப்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து ஊக்கப்படுத்தி வருபவர். தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு கொள்கைக்காக போராடி மேனாள் முதலமைச்சர்  ஜெயலலிதா அவர்கள் காலத்தில் அதை அமல் படுத்துவதற்கு பெரிதும் களத்தில் நின்று வாதாடியவர்.

 குடியரசுத் தலைவர்   சங்கர் தயாள் சர்மா, பிரதமர் நரசிம்மராவ், முதல மைச்சர் ஜெயலலிதா மூவரும் உயர் ஜாதி வகுப்பினராக இருந்த போதும் அவர்கள் காலத்தில் இந்த 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த முன் னின்று பாடுபட்டவர் என்பதை மறுக்க முடியாது.

 அரசக் குடும்பத்தில் பிறந்த மேனாள் பிரதமர் வி பி சிங் அவர்கள் காலத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் துணைக் கொண்டு மண்டல் ஆணையம் அமைவ தற்கும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பெறுவதற்கும் முன் நின்று பாடுபட்டவர். தலைவர் கலைஞர் அவர்களிடம் பிற் படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோருக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை  அமல்படுத்துவதற்கு பிர தமர்  பதவியினையும் இழந்து பெருமையினை சேர்த்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு தமிழ்நாட்டில் சிலை வைக்க வேண்டும் என விருப் பத்தினை வெளியிட்டு வலியுறுத்தியவர். இன்று அவருடைய விருப்பத்தினை நிறை வேற்றுகிற வகையில் கலைஞருடைய மகன் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் 27.11.2023 அன்று சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் சமூக நீதிக் காவலர் மேனாள்  பிரதமர் வி.பி. சிங் அவர்களின் முழு உருவச் சிலையினை அவருடைய துணைவியார், பிள்ளைகள், உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சர்  அகிலேஷ் யாதவ் அவர்கள் முன்னிலை யில் திறந்து வைத்து பெருமைப்படுத்தி யுள்ளார்.

*81 ஆண்டு கால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். பெரியார் வாழ்ந்த இடம் வெற்றிடம் ஆகி விடாமல் அந்த கொள்கை மணத்தினை இன்னமும் தமிழ்நாட்டில் பரப்பி வரும் தலைவர் அவர்கள் இரண்டு முறை கரோனா என்ற கொடும் நுண் கிருமியினால் பாதிக்கப்பட்ட போதும் அவர் செய்து வரும்  சமூக நீதி அறம் அவரை காப்பாற்றி மீண்டும் தொண்டறம் செய்வதற்கு வாய்ப்பளித்து உள்ளது என்றால் அது மிகையாகாது.

அய்பெட்டோவிடம் அன்பும் பற்றுதலும் கொண் டவர். பவள விழா மலருக்கு வாழ்த்து பெற மாநிலப் பொறுப்பாளர்களுடன் சென்றபோது நான் கருப்பு சட்டை போட்டுக் கொண்டு செய்து வருவதை நீங்கள் முழுக்கை வெள்ளை சட்டை போட்டுக் கொண்டு செய்து வருகிறீர்கள் அண்ணாமலை - வேறொன்றும் வித்தியாசம் இல்லை என்று கூறினார். விடுதலை சந்தாதாரராய் தொடர்ந்து படித்து வருகிறவர்கள் என்ற மகிழ்ச்சி எங்களுக்கு உண்டு. நீண்ட நாள் வாழ் வீர்கள் கரம் கோர்த்து சமூக நீதியினை இணைந்து காப்போம் என்று அந்தக் கொள்கை முழக்கத்தினை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

95 வயது வரையிலும் மூத்திரப்பையினை கையில் ஏந்திக் கொண்டு சமூக நீதிக் கொள்கையினை, மூடப் பழக்கங் களை வேரறுப்பதற்கு மேடையில் பேசிக்கொண்டு இருந்தவர் தந்தை பெரியார் அவர்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும் சமூக நீதியை காக்கும் தலைவராக கொள்கை முழக்கத் தினை பரப்பிக் கொண்டு இருக்கிறார். அவர் பிறந்த நாளில் இயக்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், இயக்கப் பொறுப்பாளர்கள் வாழ்த்துகளையும் பெறுவோம். நீடு வாழ்க என தமிழக ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வாழ்த்தி மகிழ்கிறோம். 

வாழ்த்துகளுடன்,

வா.அண்ணாமலை, அய்பெட்டோ அகில இந்தியச் செயலாளர். AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS) 

மா. நம்பிராஜ், மாநிலத்தலைவர்.

அ. வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர்

க. சந்திரசேகர், மாநிலப் பொருளாளர்

தமிழக ஆசிரியர் கூட்டணி சென்னை-600005 


No comments:

Post a Comment