கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, December 13, 2023

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

13.12.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யும் ஒன்றிய அரசின் குழுவினர், தமிழ்நாடு அரசு திறம்பட செயல்பட்டுள்ளதாக பாராட்டு.
* எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே தேர்தல் ஆணையர் நியமன மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* ராஜஸ்தானில் புதிய முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த பஜன்லால் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
* சமையல் எரிவாயு ரூ.500, நெல்லுக்கு கூடுதலாக ரூ.500 போன்ற தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நூறு நாளில் நிறைவேற்றப்படும். புதிய நல திட்டங்கள் காங்கிரஸ் தோற் றுவிக்கப்பட்ட நாளான டிசம்பர் 28 முதல் நடைமுறைப்படுத் தப்படும், தெலங்கானா அமைச்சர்கள் அறிவிப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தேர்தல் ஆணையர் நியமன மசோதா மூலம் ஆமாம் சாமிகளை நியமிக்க மோடி அரசு முடிவு என எதிர்க்கட்சிகள் கண்டனம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* 2024 தேர்தலுக்கு முன் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்த வேண்டும் என்ற மனு மீது ஒன்றிய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு.
* பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் 2024 தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி யில் இருந்து டிசம்பர் 24ஆம் தேதி தொடங்குகிறார். தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மகாராட்டிரா, அரியானா, ராஜஸ்தான், ஜார்கண்ட் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங் களுக்கும் செல்ல முடிவு.
* சென்னையில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரணம், தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
தி இந்து:
* இந்திய பொருளாதாரத்தைச் சுற்றி நம்பகமான பிரச்சாரத்தை “இந்தியா” கூட்டணி அமைத்தால், அது அதன் போதாமைகளைக் குறைத்து அதன் வாய்ப்புகளை கணிச மாக உயர்த்த முடியும் என்கிறார் கட்டுரையாளர் ஓம்கார் பூஜாரி.
* காஷ்மீர் விவகாரத்தில் நேருவை குற்றம் சாட்டிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வரலாறு தெரியாது என ராகுல் காட்டம்.
* உத்தரப் பிரதேசம் லக்னோ வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்றும் வேலை தரப்பட வில்லை என ஓபிசி, எஸ்.சி. பிரிவினர் 500 நாள் தொடர் போராட்டம்.
* ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனுத்தாக்கல் செய்துள்ளது. 10 மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் குடிய ரசுத் தலைவருக்கு அனுப்பியது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது, தன்னிச்சையானது என உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது.
தி டெலிகிராப்:
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபடுகிறது என ராகுல் குற்றச்சாட்டு.
* ம.பி.யில் ஓபிசி முதலமைச்சர் தானே என்ற கேள்விக்கு, “பிரதமர் மோடியும் ஓபிசி தான். ஆனால் கேள்வி அதுவல்ல. பிரச்சினை பிரதிநிதித்துவம் பற்றியது. நிறுவன கட்டமைப்புகளில் ஓபிசி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பங்கு என்ன? செல்வத்தை மூடக்கு வது யார்? சமூகத்தின் ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் அவர்களின் உரிமையைப் பெறுவதை நாங்கள் உறுதி செய்வோம் என பதிலடி.
* அன்புள்ள நரேந்திர மோடி, 1947க்குப் பிறகு நடந்த மிகப் பெரிய பணக் கொள்ளையை நீங்கள் விளக்க வேண்டும் என்று நாடு விரும்புகிறது. இறக்குமதி செய்யப் பட்ட நிலக்கரி மற்றும் மின் சாதனங்களின் விலையை உயர்த்தி, உங்கள் நெருங்கிய நண்பரான அதானி, இந்தியாவில் இருந்து ரூ. 17,500 கோடியைப் பெறுகிறார். அவர் மேலும் ரூ.20,000 கோடியை ஆஃப்ஷோர் ஷெல் நிறுவனங்கள் மூலம் இந்தியாவிற்குள் கொண்டு வந்து செபியின் கண்களுக்குக் கீழே நிலக்கரி விலையை உயர்த்துகிறார் – ஏன்? என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி.
– குடந்தை கருணா

No comments:

Post a Comment