தென்காசி, டிச. 3- திருநெல்வேலி மாவட்ட கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரின் 91ஆவது பிறந்தநாள் விழா, நூல்கள் வெளி யீட்டுவிழா பாளையங்கோட்டையில் மாநகர பக துணைச் செயலாளர் எம்.ஜி.ஏ.ஜார்ஜ் வணிக மய்யத்தில் எழுச்சியோடு நடைபெற்றது.
மாவட்ட திராவிடர் கழக செய லாளர் இரா.வேல்முருகன் குடும் பத் தலைவர் ஆசிரியரின் தனிச் சிறப்புக்களை எடுத்துக்க்கூறி வர வேற்புரை வழங்கினார்.
மாவட்ட கழக தலைவர் ச.இராசேந்திரன் தமிழர் தலைவரின் எழுத்துக்களில் நிறைந்துள்ள உருக்கமான செய்திகளை விளக்கி நெகிழ்ச்சியுடன் தலைமையுரை யாற்றினார்.
நூல்களின் சிறப்பினை விளக்கி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத் தநாடு.இரா.குணசேகரன் அறிமுக வுரையாற்றினார்.
விடுதலை ஆசிரியராக 60 ஆண்டுகள் நூலினை, காப்பாளர் இரா.காசியும், வாழ்வியல் சிந்தனை நூலினை மாநகர பக தலைவர் முரசொலி முருகனும், பகுத்தறிவுப் போராளி ஆசிரியர் கி.வீரமணி 91-ஆவது பிறந்தநாள் விழா மலரினை மாவட்ட மகளிரணி தலைவர் இரா.பானுமதியும் வெளியிட்ட னர்.
மாநகர பக செயலாளர் மருத்து வர் க.வேல்மணி பெற்றுக் கொண் டார். தொடர்நது பெருமக்கள் நூல்களை பெற்றுக்கொண்டனர். காப்பாளர்இரா.காசி, வள்ளியூர் பக தலைவர் ந.குணசீலன், மாவட்ட மகளிரணி தலைவர் இரா.பானுமதி, மாநகர திமுக துணைச்செயலாளர் அப்துல்கயூம், மும்பை பெருந்தகையாளர் சு.கும ணராசன்,ஆகியோர் உணர்சிப் பூர்வமாக உரையாற்றினர்.
கழகப்பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார். இறுதியில் நெல்லை பகுதிகழக செயலாளர் ந.மகேசு நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பக தலைவர் செ.சந்திரசேகரன், மாவட்ட பக செயலாளர் சு.திருமா வளவன், மாநகர பக துணைத் தலைவர் கனகதாமசு, மாநகர பக துணைச்செயலாளர் சந்திப்பு.நடராசன்,
மாவட்ட மாணவர்கழக தலைவர் தலைவர் செ.சூரியா, சேரை ஒன்றிய தலைவர் கோ.செல்வ சந்திரசேகர், தச்சை பகுதி கழக செயலாளர் மாரி.கணேசு, உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்று நூல்களை வாங்கினர்.
No comments:
Post a Comment