தமிழ்நாடு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்பதா? நிர்மலா சீதாராமனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

தமிழ்நாடு வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்பதா? நிர்மலா சீதாராமனுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை, டிச.23- தமிழ்நாடு காங் கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழ கிரி வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
மழை வெள்ள பாதிப்பை எதிர் கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு முதலமைச் சரின் கோரிக் கையை ஏற்க முடியாது. தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது. கூடுதல் சிறப்பு நிதி வழங்க முடியாது என்று தமிழ்நாட் டின் மீது மிகுந்த வன்மத்தை வெளிப்படுத்துவது போன்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.
இது தமிழ்நாட்டிற்கு இழைக்கப் பட்ட மிகப்பெரிய அநீதியாகும். கிட்டத்தட்டத் தேசிய பேரிடர் அறிவிக்க முடியாது என்று சொல்வ தன் மூலமாக தமிழ்நாட்டு மக் களின் கோரிக்கையை நிராகரித்து, தமிழ் நாட்டு மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை இழைத்திருக் கிறார்.

நீண்ட காலமாகவே தமிழ் நாட்டு மக்கள் மீது மாற்றாந்தாய் மனப்பான் மையோடு ஒன்றிய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருவதைத்தான் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு வெளிப்படுத்துகிறது. இதை தமிழ் நாட்டு மக்கள் மிகுந்த வேதனை யோடு எதிர்கொண்டு வருகிறார்கள். ஆனால் எப்படி இருந்தாலும் தமிழ் நாட்டு மக்களைப் பாதிப்பிலிருந்து மீட்கும் முயற்சியில் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தமிழ்நாட்டு மக் களை வஞ்சிக்கும் வகையில் பேசி யுள்ள நிர்மலா சீதாராமனை வன்மை யாகக் கண்டிக்கிறோம்.
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment