தேநீர்க் கடையில் விடுதலை., பலருக்கு பகுத்தறிவு தரும் செய்தித்தாள். வந்தவர் அதை கையில் எடுக்க., கடைக்காரர், ”ஏங்க… இது பழைய பேப்பர்ங்க…” என்றார். மறுமொழியாக, ”எப்போதைய விடுதலையாக இருந்தாலும் புரட்டினால் அறிவை புரட்டிப்போடும்”என வந்தவர் பதில் சற்றே பின்னோக்கி யோசிக்க வைத்தது. மறைந்த மேனாள் தாராபுரம் நகர செயலாளர் தா.சா. பாலு அவர்களின் ”விடுதலை சேமிப்பு பழக்கம்”. அவர் வீட்டின் வரவேற்பறையில் எப்போதும் விடுதலை கால வரிசைப்படி, ஆண்டு வரிசைப்படி செல்ஃபில் கட்டி வைத்ததோடு, மேற் கோள்களையும் சான்றாதாரங்களையும் தந்து கொண்டே இருப்பார்.
விடுதலை தாகம்! இனத்தின் எழுச்சி!!
– பெரியார் குயில், தாராபுரம்.
No comments:
Post a Comment