சென்னை,டிச.13- தற்போது புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப் படும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் கடந்த அக். 27ஆம் தேதி தொடங்கி, டிச. 9ஆம் தேதியுடன் முடிவடைந் துள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வரும் ஜன.5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள், புதிய வாக்காளர் விழிப்புணர்வு உள்ளிட் டவை குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:
அக். 27ஆம் தேதி முதல் டிச. 9ஆம் தேதி வரையில் பெயர் சேர்த் தல், நீக்கம், முகவரி மாற்றம் தொடர் பாக பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கி யுள்ளது. தற்போதும் பெயர் சேர்த்தல் உள்ளிட்டவற்றுக்கு ஆன்லைனிலும், தாலுகா அலு வலகங்களில் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம்.
ஆனால், அந்த விண்ணப்பங் கள் ஜனவரி மாதத்துக்குப் பிறகு பரிசீலிக்கப்படும். தற்போது பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ள புதிய வாக்காளர்களுக்கான வாக்காளர் அட்டைகள், தேர்தல் ஆணையத் தின் அனுமதி பெறப்பட்டு வரும் மார்ச் மாதம் வழங்கப்படும்.
இதுதவிர, ஏற்கெனவே வாக் காளர் அடையாள அட்டைகள் வைத் திருப்போர், புதிய அட்டை பெற, இணையத்தில் விண்ணப்பித் தால் இலவசமாக வழங்கப்படு கிறது.
தற்போதைய புயல், மழை காரணமாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப் பாட்டு இயந்திரங்கள் போன் றவை வைக்கப்பட்டுள்ள கிடங் குகளில் எந்த பாதிப்பும் ஏற் படவில்லை.
வாக்குப்பதிவு குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், கல்லூ ரிகள், பள்ளிகளை தொடர்பு கொண்டு மாணவர்கள் மத்தி யில் கட்டுரைப் போட்டி, சுவ ரொட்டி தயாரித்தல் போட் டிகள் நடத்துகின்றனர்.
இதில் சுவரொட்டி தயாரிக் கும் போட்டி முடிந்துவிட்டது. கட் டுரைப் போட்டிகள் அடுத்த 10 தினங்களில் தொடங்க உள்ளது. ‘இன்லேண்ட்லெட் டரில்’ நாங்கள் வழங்கியுள்ள தேர்தல் தொடர்பான 5 தலைப் புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து அது குறித்து கட்டுரை எழுதி, மாவட்ட தேர்தல் அதிகா ரிக்குஅனுப்ப வேண்டும்.
இதுதவிர, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சி யரின் அலு வலகங்கள், மாவட்ட வருவாய் அதி காரிகள் அலுவல கங்களில் அடுத்த 10 நாட்களில் தலா ஒரு மின்னணு இயந்திரம் வைக்கப்பட உள்ளது.
இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் இந்த இயந்திரங்களை பயன்படுத்தி வாக்களிப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ள வசதி செய்யப் பட்டுள்ளது.
இதுதவிர, தேசிய வாக்காளர் தின நிகழ்வுக்குப் பிறகு, வாக்குச் சாவடிகள்தோறும் வாகனத்தில் மின்னணு இயந்திரங்களை கொண்டு சென்று, அங்கு மக்களுக்கு வாக்களிப்பது எப்படி என்பதை செய்முறை விளக்கம் அளிக்க முடி வெடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்ற தேர் தல் தொடர்பான பணிகளில் ஒன்றாக, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு அட்ட வணை மற்றும் திருவிழாக்கள், பண்டி கைகள் குறித்த விவரங் களை மாநில அரசிடம் கேட் டுள்ளோம். இந்த விவரங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப் படும். -இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment