ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியை ரத்து செய்தது செல்லுமாம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 12, 2023

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியை ரத்து செய்தது செல்லுமாம் : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

featured image

புதுடில்லி, டிச.12- ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதியை ரத்து செய்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத் துக்குள் காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு விடுதலை அடைந் ததும் மன்னராட்சியின் கீழ் இருந்த பல்வேறு சமஸ்தானங்கள் இந்தியா வின் ஆளுகைக்குள் கொண்டு வரப்பட்டன.

காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி
அதன்படி நாட்டின் வட கோடியில் மன்னர் ஹரிசிங்கின் ஆட்சியின் கீழ இருந்த காஷ்மீர் பிராந்தியத்தையும் இந்தியாவுடன் இணைக்க அவர் ஒப்புக்கொண்டார். சுதந்திரம் அடைந்த 3 மாதங்களுக் குப்பின் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
இயற்கை எழிலுக்கு பேர் போன காஷ்மீரில் பின்னர் ஆட்சிப்பொறுப் புக்கு வந்த ஷேக் அப்துல்லா, மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வேண்டுமென அப்போதைய பிர தமர் ஜவஹர்லால் நேருவிடம் கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து அரச மைப்பு சட்டப்பிரிவு 370 உருவாக் கப்பட்டு, மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.

காஷ்மீருக்கு சலுகைகள்
இதன் மூலம் காஷ்மீருக்கு என தனி அரசியல் சட்டம், தனிக்கொடி போன்றவை உருவாக்கப்பட்டது. ராணுவம், வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பு தவிர பிற துறைகள் சார்ந்து நாடாளுமன் றத்தில் இயற்றப்படும் சட்டங்கள் காஷ்மீருக்கு பொருந்தாது.
இதைப்போல வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்கவோ, தொழில் தொடங் கவோ முடியாது. காஷ்மீர் பெண்கள் வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால் சொத்துரிமை பறி போகும் உள்ளிட்ட பல்வேறு சலு கைகள் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்தது.

சிறப்புத் தகுதி ரத்து
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட இந்த சிறப்புத் தகுதியை ரத்து செய் வது என்பது பாஜனதாவின் நீண்ட கால திட்டங்களில் ஒன்றா கும்.
எனவே பிரதமர் மோடி தலை மையிலான பா. ஜனதா அரசு மத் தியில் 2-ஆவது முறையாக 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் இந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப் பட்டது.
அதே ஆண்டு ஆகஸ்டு 5ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப் படையில் அன்றைய நாளே காஷ் மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்து அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த அறிவித்தார்.
பின்னர் 370ஆவது சட்டப்பிரிவை ரத்துசெய்யும் மசோதா, மாநி லத்தை 2 யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர் (லடாக்) பிரிக்க வகை செய்யும் காஷ்மீர் மறுசீர மைப்பு மசோதா ஆகியவை எதிர்க் கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
இது காஷ்மீரில் பெரும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மாநிலத்தில் நீண்ட காலத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பின்னர் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதற்கிடையே காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும்  370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்த ஒன்றிய அரசின் மசோதாக்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப் பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வுமுன் விசா ரிக்கப்பட்டு வந்தது.
4 ஆண்டுகளாக நடந்த இந்த விசாரணைகள் அனைத்தும் முடிந்த நிலையில் நேற்று (11.12.2023) தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஏகமனதாக தீர்ப்பு
இதில் காஷ்மீருக்கு சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சாசன பிரிவு 370-அய் ரத்து செய்தது செல் லும் என நீதிபதிகள் ஏகமனதாக அறிவித்தனர்.
மேலும் காஷ்மீரில் இருந்து லடாக்கை பிரித்து தனி யூனியன் பிரதேசமாக அறிவித்ததும் செல் லும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறினர்.
5 நீதிபதிகளில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரிய கந்த் ஆகியோர் ஒரு தரப்பாகவும், நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஒரு தரப்பாகவும், நீதிபதி கன்னா ஒரு தரப்பாகவும் இணக்க மான தீர்ப்பு எழுதியுள்ளனர்.
இதில் தலைமை நீதிபதி உள் ளிட்ட 3 நீதிபதிகளின் சார்பில் தலைமை நீதிபதி வாசித்த தீர்ப்பில் கூறியதாவது,

தற்காலிக வழிமுறை
இந்திய அரசியல்சாசனம் அரச மைப்பு நிர்வாகத்துக்கான முழுமை யான குறியீடாக உள்ளது. இந்தியா, அதாவது பாரதம் மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என அர சியல் சட்டபிரிவு 1 கூறுகிறது. இந் தியாவின் ஒரு மாநிலமாக காஷ்மீ ரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்.
அரசமைப்பு சட்டப் பிரிவு 370, இரண்டு நோக்கங்களுக்காக அறி முகப்படுத்தப்பட்டது. முதலாவ தாக மாநிலத்தின் அரசியல் நிர்ணய சபை உருவாகும் வரை இடைக்கால ஏற்பாட்டை வழங்குதல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஏற்படுத்தப் பட்டது.
இரண்டாவதாக இது ஒரு தற்காலிக வழிமுறைதான். மாநிலத் தில் போர் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப் பட்ட இடைக்கால ஏற்பாடு ஒரு கூட்டாட்சியின் அம்சம் இறை யாண்மை அல்ல.

குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு
1949ஆம் ஆண்டு நவம்பர் 25இல் இந்திய அரசமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, காஷ்மீர் மாநிலத்துக்கு என தனித்த இறையாண்மை கூறுகள் எதுவும் இல்லை.
அரசியல் நிர்ணய சபையின் பரிந்துரையின்றி சட்டப் பிரிவு 370(3) ரத்து செய்யப்பபடுவதாக அறிவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உண்டு. 370(3)இன் கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தும் குடியரசுத் தலைவர் ஒரு தலைப் பட்சமாக 370ஆவது பிரிவை நிறுத் தும் அறிவிப்பை வெளியிடலாம்.
370 (1)ஆவது பிரிவின் கீழ் குடி யரசுத் தலைவரின் தொடர்ச்சியான அதிகாரத்தைப் பயன்படுத்துதல், அரசமைப்பு ஒருங்கிணைப்பின் படிப்படியான செயல்முறை நடந்து கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
அரசியல் சட்டப்பிரிவு 370(1)(டி)இ-ன்படி அரசமைப்பின் அனைத்து விதிகளையும் ஜம்மு _காஷ்மீருக்குப் பயன்படுத்தலாம். காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப் புத் தகுதியை ரத்து செய்ய மாநில அரசின் ஒப்புதலைப் பெற தேவையில்லை.

யூனியன் பிரதேசமாக பிரித்தது செல்லும்
யூனியன் பிரதேசமாக பிரிக்கப் பட்ட லடாக்கை தவிர்த்து ஜம்மு _ காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங் கப்படும் என சொலிசிட்டர் ஜென ரல் துஷார் மேத்தா அளித்த அறிக் கையில் கட்டிக்காட்டியுள்ளார்.
எந்த ஒரு மாநிலத்திலிருந்தும் ஒரு பகுதியை பிரித்து யூனியன் பிரதேசமாக உருவாக்கும் அதி காரம் ஒன்றிய அரசுக்கு உண்டு. அந்தவகையில் லடாக் யூனியன் பிரதேசத்தை பிரிப்பதற்கான முடிவு செல்லுபடியாகும்.
காஷ்மீருக்கு கூடிய விரைவில் மாநிலத் தகுதி வழங்க வேண்டும். அத்துடன் காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டப் பிரிவு 14இ-ன் கீழ் காஷ்மீரில் 2024 செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் சட்டசபை தேர்தலை நடத்த வேண் டும். இவ்வாறு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறினார்.

நீதிபதி சஞ்சய்கிஷன்கவுல் தனது உத்தரவில்,
காஷ்மீரையும் மற்ற மாநிலங் களுக்கு இணையாக மெல்ல மெல்ல கொண்டு வருவதே அரசியல் சட்டப்பிரிவு 370-இன் நோக்கம். அங்கு 1980ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் மனித உரிமை மீறல்களை விசாரிக்க பாரபட்சமற்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்க வேண்டும்’ என தெரிவித்தார்.
இந்த இருதரப்பு தீர்ப்புகளுடன் உடன்பட்டு தீர்ப்பு வழங்கிய நீதிபதி சஞ்சீவ் கன்னா, தனது முடிவுக்கான காரணங்களை அதில் விளக்கி இருந்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இந்த தீர்ப்பின் மூலம் காஷ்மீரின் சிறப்புத் தகுதி ரத்து உறுதி செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment