புதுடில்லி,டிச.13- உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்ற மளிப்பதாகவும், ஜம்மு-காஷ்மீர் மகிழ்ச்சியாக இல்லை எனவும் ஜம்மு-காஷ்மீரின் மேனாள் முதலமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும், ஜம்மு-காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கூறிய தீர்ப்பை வரவேற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பு எங்களுக்கு ஏமாற் றத்தைக் கொடுத்துள்ளது. உச்சநீதிமன்றமே எங்களது கடைசி நம்பிக்கையாக இருந்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை என நினைக்கிறேன். அவர்கள் ஜம்முவில் இருந்தாலும், காஷ்மீரில் இருந்தாலும் அவர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்புத் தகுதி நீக்கப்பட்டது அவசரகதியாக தவறாக எடுக்கப்பட்ட முடிவு என்றார்.
செம்பரம்பாக்கம் ஏரி நீர்திறப்பு 600 கன அடியாக குறைப்பு பொதுப்பணித்துறை தகவல்
சென்னை, டிச.13 மழை பொழிவது நின்றதால், செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் திறப்பு 600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.
மிக்ஜாம் புயல் கரையை கடந்து சென்னை புறநகர் பகுதிகளில் மழை விட்டதுடன், தற்போது நன்றாக வெயிலும் அடிக்க தொடங்கியுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தும் கணிசமாக குறைய தொடங்கியது. அந்த வகையில், நேற்று (12.12.2023) காலை 6 மணி நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடியில், தற்போது 22.59 அடி தண்ணீர் உள்ளது. அதேபோன்று மொத்த தண்ணீர் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியில், தற்போது 3271 மில்லியன் கனஅடி இருப்பு உள்ளது.
மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்தும் 622 கன அடியாக குறைந்துள்ளது. இதனால், கோடைகால தண்ணீர் தேவை களை கருத்தில் கொண்டு, ஏரியில் இருந்து தற்போது 622 கன அடி உபரிநீர் மட்டுமே திறந்து விடப்பட்டு வருகிறது. இதன்மூலம், ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்படும் என்று ஏரியை பாதுகாத்து வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து ஏரியின் நீர்மட்டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment