அரசுப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 8, 2023

அரசுப் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு!

சென்னை, டிச. 8 தமிழ் நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கு முன்பு, செய்ய வேண்டியது என்ன என் பது குறித்து வழிகாட்டு தல்கள் வெளியாகி உள் ளன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சொல்வது என்ன?

கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி கடந்து சென்ற ‘மிக்ஜாம் புயல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங் களை கடுமையான பாதிப்புக்குள்ளாக்கியது. இதனால் தொடர்ந்து மீட்பு, நிவாரணப் பணி கள் நடைபெற்று வருகின் றன.
இன்னும் பல்வேறு சாலைகளிலும், குடியிருப் புப் பகுதிகளிலும் வெள்ள நீர் வடியவில்லை.. மீட்பு, நிவாரணப் பணிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.. இதனால், பள்ளி மற்றும் கல்லூரிக ளில் பாதிக்கப்பட்ட பொது மக்கள் தங்க வைக்கப்பட் டுள்ளனர்.
இந்நிலையில், பள்ளி களை திறக்கும் முன் செய்ய வேண்டியது என்ன என் பது குறித்து வழிகாட்டு தல்கள் வெளியிடப்பட் டுள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வி இயக்குநர் அறிவொளி வெளியிட்ட அறிக்கை வருமாறு:

“பள்ளிகள் திறக்கப் படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமை யாக தூய்மை செய்ய வேண்டும். முட்புதர்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். சுற்றுச் சுவர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் மாணவர்களை அருகில் செல்ல அனுமதிக்கக் கூடாது. மழையால் பாதிக் கப்பட்ட வகுப்புகளை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும்.

இடிக்க வேண்டிய கட்டடங்கள் இருந்தால் அவற்றைச் சுற்றி பாது காப்பு வளையம் அமைக்க வேண்டும். வகுப்புகளில் உள்ள இருக்கைகளில் பூஞ்சை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும்.

மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என் பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெற் றோர் ஆசிரியர் கழக உறுப் பினர், பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் பள்ளிக ளுக்குத் தேவையான வேறு சில அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment