சென்னை,டிச.7- இந்தியக்கம் யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த சில நாட்களாக மிரட்டி வந்த மிக் ஜாம் புயல் வரலாறு காணாத பெரு மழையாக பெய்து உள்ளது. சூறைக் காற்று ஆயிரக்கணக்கான மரங்களை முறித்து வீழ்த் தியுள்ளன. சென்னை பெரு மாநகரிலும் அதன் சுற்று வட்டாரப் புறநகர் களிலும் நூற்றுக்கணக் கான குடியிருப்புகளும் தண்ணீர் தேங்கி, மக்கள் தத்தளித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு முன் னெச்சரிக்கை தடுப்பு நட வடிக்கைகள் மேற்கொண் டிருந்த போதும், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
அறுபதாயித்துக்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைத்து, லட்சக்கணக்கான மக் கள் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு வழங்கும் பணியில் அரசும், மாநகராட்சியும் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது.
இந்த வரலாறு காண பேரிடர் கால நெருக்கடி யில் இருந்து பாதுகாப்பாக மீட்க அரசு மேற் கொண்டு வரும் நிவாரணப் பணிகளோடு இணந்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், வர்க்க – வெகு மக்கள் அமைப்புகளும் ஈடுபட்டு மக்களுக்கு உதவ வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. – இவ்வாறு இரா.முத்தரசன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment