உச்ச நீதிமன்றத்தில் மாண்பமை நீதிபதிகளே அதிர்ச்சி அடையக்கூடிய அளவிற்கான ஒரு வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பா.ஜ.க. தலைவரும், வழக்குரை ஞருமான அஸ்வின்குமார் உபாத்யாயா என்பவ ரால், அந்த வழக்கு தொடுக்கப்பட்டது. அவர் சார்பில் மூத்த வழக்குரைஞர் ரஞ்ஜித்குமார் ஆஜரானார்.வழக்கினை மாண்பமை நீதிபதிகள் ரி.வி.ஜோசப் மற்றும் ஹரிஷ்கேஷ்ராய் ஆகியோர் விசாரித்தனர்.
டில்லி உயர்நீதிமன்றத்தில் அஸ்வின்குமாரால் வக்ஃப் போர்டு சட்டத்தினை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கினை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றி, ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்பது வழக்கின் கோரிக்கையாகும். வக்ஃப் வாரிய சொத்துக்களை காப்பாற்றவும் பராமரிக்கவும் வக்ஃப் போர்டு சட்டம் 1954இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் 1995இல் திருத்தச்சட்டம் ஒன்றும் நிறை வேற்றப்பட்டு அமலில் உள்ளது.
மேற்கண்ட வக்ஃப் வாரிய சட்டத்தில் வாரிய உறுப்பினர்களாக முகம்மதியர்கள் மட்டும்தான் நியமிக்கப்பட வேண்டும் என்று உள்ள பிரிவானது மதச்சார்பின்மைக்கும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பிரிவிற்கும் எதிரானது; மேலும் அரசியல் சட்டப்பிரிவுகள் 14 மற்றும்
15க்கும் விரோதமானது. ஆகவே அவைகளை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்பதே வாதமாகும்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டபோது, மனுதாரரின் வழக்குரைஞர். வக்ஃப் வாரியச்சட்டம் அரசமைப்புச் சட்டம் குறிப்பிடும் சமத்துவத்திற்கு எதிரானது என்று வாதத்தை துவங்கினார்.அப்போது நீதிபதி ஜோசப் அவர்கள், பொதுவாக தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் – வக்ஃப் வாரியம். சொத்துக்களை பராமரிக்க அமைக்கப்பட்டதே தவிர அது சொத்துக்களுக்கு உரிமையாளரல்ல என்று கூறி, மேலும் வக்ஃப் வாரியச் சட்டத்திலே ஒரு இடத்திலாவது நீங்கள் கூறும் சமத்துவ மின்மைக்கான (Inequality) ஆதாரம் காட்ட முடியுமா? என்று கேள்வி எழுப் பினார். மேற்கூறிய சட்டப்படி விவகாரங்களைக் கவனிக்க ஒரு நீதி அலுவலர், மற்றும்2 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும். அந்த 2 உறுப்பினர்கள் முகம்மதி யர்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாய மில்லை.
ஆனால் அதேநேரத்தில் ஹிந்துமதம் சம்பந்தப்பட்ட பல்வேறு மாநில சட்டங்களில் குறிப்பாக தமிழ்நாடு, ஒடிசா, மகாராட்டிர மாநிலங்களில் ஹிந்து மதத்தைச் சார்ந்தவர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும் என்று உள்ளதே என்றும் வினவியுள்ளார். மேலும் வக்ஃப் வாரியச்சட்டம் செல்லாது என்று சொன்னால் அதனால் ஆக்ரமிப்பாளர்கள் தான் மகிழ்ச்சி யடைவார்களே என்றும் சந்தேகத்தை எழுப் பினார்.
மனுதாரர் சார்பில் “வக்ஃப் வாரியச் சட்டத்தில் ஆக்ரமிப்பாளர்களை அகற்ற அதிகாரமுள்ளது. ஆனால் அதேபோன்ற அதிகாரம் ஹிந்து, பவுத்த மதங்களுக்கு இல்லை என்றும் வாதிடப்பட்டது.
பின்னர் கருத்து தெரிவித்த நீதிபதி, நீங்கள் இணைக்க வேண்டும் என்று சொன்ன வழக்கு வேறு – டில்லி உயர்நீதிமன்றத்திலே உள்ள உங்க ளுடைய வழக்கு வேறு என்றும் தெரிவித்தார். மனுதாரரின் வழக்குரைஞர், நீதிபதி எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய பதிலுடன் வருவதாகத் தெரிவித்ததின் அடிப்படையில் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
சத்தமின்றி யுத்தமொன்று நடத்தப்படுகிறது. ஹிந்து மதத்திலே எடுத்துக்கொண்டால் ஜாதி வாரியாக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகின்றது. ஆனால் அப்படிப்பட்டவர்கள் மற்ற மதங்களில் குறுக்கீடு செய்து மதக்காழ்ப்புணர்ச்சியை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
கமுதி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலிலே நுழைந்தார்கள் என்பதற்காக கோயில் தீட்டைக் கழிக்க கமுதி நாடார்களுக்கு ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி 5,000 ரூபாய் அபராதம் விதித்தார். அதே சேதுபதி தனக்குவந்த அழைப்பை விவேகானந்தரிடம் கொடுத்து கூடவே ரூ.5000 பணமும் கொடுத்து அமெரிக்கா அனுப்பி வைத்தார். அவரும் அங்கு சென்று வெள்ளைக்காரர்களை கட்டி அணைத்து “சகோ தரர்களே” என்று அழைத்தார் என்று பெரு மையாகக் குறிப்பிடுகிறார்கள். ஆனால் இவர்களால் சொந்த நாட்டில் உள்ள மக்களை கட்டி அணைக்க முடியவில்லையே?
– வை.பார்த்திபன்
தலைவர்,
பகுத்தறிவாளர் பேரவை, பம்மல்
No comments:
Post a Comment