பேராசிரியர் மு.நாகநாதன்
ஆசிரியர் வீரமணியாருக்கு
அகவை 91!
உள்நாட்டுப் பன்னாட்டுத்
தமிழர்கள் வாழ்க வாழ்கவே
என்று வாழ்த்தி மகிழ்கின்றனர்
ஓய்வறியா உழைப்பு
சோர்வறியாப் பயணம்
ஊர் தோறும் பெரியாரின் கொள்கை முழக்கம்!
எத்தனை ஆண்டுகள் ?
80 ஆண்டுகள்
இதழியல் ஆசிரியர் பணி 61 ஆண்டுகள்
ஆண்டுகள் நகர்கின்றன
ஆசிரியர் விரைந்து
நடக்கின்றார்!
நாட்டைச் சமுதாயத்தைப்
பாதிக்கும் தீங்கு தரும்
சட்டங்களைத்
திட்டங்களை எதிர்க்கிறார்.
பயணங்கள் மேற்கொண்டு
பரப்புரை செய்கிறார்.
வைக்கம் கோயில் தெருக்களில்
ஒடுக்கப்பட்ட மக்கள் நுழையக்கூடாது
கோயிலில் உள்ளே நுழையவே கூடாது என்று
அறிவித்தது
பிரித்தானிய ஆட்சியின் கீழ்
இயங்கி வந்த குறுநில மன்னரின்
ஆட்சி
கேரளத் தலைவர்கள் அழைத்தனர்
பெரியாரை!
கொட்டும் மழை
சுட்டெரிக்கும் வெயில்
மக்களின் துணையோடு
குடும்பத்தோடு களம் கண்டார்.
சிறை சென்றார் !
வென்றார் பெரியார்!!
வைக்கம் வெற்றியின்
நூறாண்டு விழா
கழக ஆட்சியும்
கம்யூனிஸ்டு ஆட்சியும்
மாண்புறும் விழாக்கள்
எடுக்கின்றன.
முடியாட்சி முடிவுற்று
குடியாட்சி மலர்ந்து;
குடியாட்சியிலும்
சனாதன குருக்கள்.
என்ன கொடுமை!
ஒன்றிய ஆட்சியிலோ
விஸ்வ குரு
ஆட்டிப் படைக்கின்றனர்
எல்லா நிர்வாக மன்றங்களையும்!
நீதி வழுவாமல்
நெறி தவறாமல் இயங்க வேண்டிய
மாமன்றங்களும்
தடுமாறுகின்றன
கோயிலில் நுழைவு
எங்களின் பிறப்புரிமை!
கோயிலில் அர்ச்சகர் ஆவது
அரசமைப்புச் சட்டம் வழங்கிய
அடிப்படை உரிமை!!
என்று முழங்கினார்
நமது ஆசிரியர்!
வைக்கம் மீண்டும் உயிர்த்தெழுகிறது.
விஸ்வ கர்ம திட்டம்
ஒடுக்கப்பட்ட பட்ட மக்களின்
உயர் கல்வி வேலைவாய்ப்புகளைச்
சீரழிக்கும்
குலக்கல்வித் திட்டத்தின் மறு சுழற்சி
என்று முதலில் இனம் கண்டவர்
நமது ஆசிரியர் வீரமணியார்.
களத்திலும் அவரே முதலில்
நிற்கிறார்!
பயணங்கள் தொடர்கின்றன
பரப்புரைகள் நிகழ்கின்றன
ஆசிரியரின் ஓங்கி ஒலிக்கும் குரலோசை
கேட்டு மக்கள் விழிப்புணர்வு
பெறுகின்றனர்.
இறுதி வெற்றி மக்களுக்கே!
இது தான் ஜனநாயகம்
நமக்குப் புகட்டும் பாடம்!
அய்யா வழியில்
அண்ணா நெறியில்
கலைஞர் உணர்வில்
ஆசிரியர் நெடும் பயணம்
தொடர்கிறது!
பட்டித்தொட்டி தொடங்கி
பல்கலைக்கழகம் வரை
ஆசிரியரின் அளப்பரியப்
பணிகள் ஒளியூட்டுகின்றன.
தொண்டற மணி திக்கெட்டும் ஒலிக்கட்டும்!
சனாதனம் சாயட்டும்
சமத்துவம் வெல்லட்டும்!
ஆசிரியர் வீரமணியார்
பல்லாண்டு வாழ்க!
வாழ்க!!
No comments:
Post a Comment