புதுடில்லி, டிச. 10- ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக நாடா ளுமன்றத்தில் அதிரடியான வாதங்களை வைத்துவந்த மஹூவா மொய்த்ராவின் மக் களவை உறுப்பினர் பதவியை மோடி அரசு பறித்தது.
அதானிக்கு எதிராக கேள்வி யெழுப்ப தொழிலதிபர் ஹிரா நந்தனியிடம் லஞ்சம் பெற்றார் என்று குற்றம்சாட்டி, மஹுவா மொய்த்ரா பதவியை மோடி அரசு பறித்துள்ளது.
இதுதொடர்பாக, பாஜக உறுப்பினர் நிஷிகாந்த் துபே, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் புகார் அளித் திருந்தார்.
அதன்பேரில் பாஜக உறுப் பினர், வினோத் குமார் சோன்கர் தலைமையிலான மக்களவை நெறி முறைக் குழு விசாரணை நடத்தி, மஹூவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நவம் பர் 9 அன்று அறிக்கை அளித் தது. இந்த அறிக்கை, 8,12,2023 அன்று மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டது.
இது பழிவாங்கும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களை ஒடுக்கும் நடவடிக்கை என்று எதிர்கட்சிகள் அமளியில் ஈடு பட்டதால் மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப் பட்டது. பின்னர் அவை மீண் டும் கூடியபோதும் அவையில் கடுமையான அமளி நிலவியது.
மஹூவா தனது தரப்பு கருத்தை முன்வைக்க விரும்பி னார். அவருக்கு அவையில் பேச அனுமதி அளிக்கப்பட வில்லை. ஆனால் மஹூவா பேச அனுமதி அளிக்கக் கோரி மக்களவையில் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து போராட் டம் நடத்தினர்.
இதனிடையே, மஹூவா மொய்த்ரா பதவி நீக்கத் தீர் மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியதாக மக்கள வைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.
எதிர்க்கட்சிகள் போராட்டம்
மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண் டித்து மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகளின் உறுப்பினர் கள் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தலைமையில் போராட்டம் நடத்தினர்.
மஹூவா பேசுகையில், “நாடாளுமன்றத்தில் என் வாயை அடைத்துவிட்டால் போதும், அதானி பிரச்சினை தீர்ந்துவிடும் என மோடி அரசு நினைக்கிறது.
ஆனால், நீங்கள் ஒரு பெண் எம்.பி.யின் வாயை அடைக்க எந்த எல்லை வரை செல் வீர்கள் என்பதையே இந்த பதவிப் பறிப்பு நிகழ்வு காட்டு கிறது.
எனக்கு இப் போது 49 வயதாகிறது. நான் இன்னும் 30 ஆண்டுகளுக்கு பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராடுவேன்.
இது பாஜக ஆட்சி முடியும் காலம். நான் மீண்டும் வரு வேன்” என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment