ஊர்வலத்தில் சென்ற சாமி சிலை தலைகீழாக புரண்டு விழுந்தது
பக்தர்கள் அதிர்ச்சி : பொம்மைகளை கடவுள் என்று நம்பும் பக்தர்கள் சிந்திப்பார்களாக!
கோவை, டிச.27 தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே அளேபுரம் கிராமத்தில் லட்சுமி நரசிம்ம சாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசியை யொட்டி (23.12.2023) பரமபதம் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி என நடைபெற்றது. பெரு மாளை சொர்க்கவாசல் வழியாக காண்பதற்காக பக்தர்கள் அதி காலையிலேயே கோவிலில் வந்திருந்தனர்.
காலை 5.30 மணிக்கு லட்சுமி நரசிம்ம சாமி கருட வாகனத்தில் சொர்க்கவாசல் எனப்படும் வழி யாக வந்தார். தொடர்ந்து கோவிலை சுற்றி கருடவாகனத்தில் கடவுளர் சிலை வீதி உலா வரும் நிகழ்வு நடந்தது. அதே நேரத்தில் கருடவாகனத்தை தாலாட்டிய படி பக்தர்கள் சுமந்து சென்றனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பெருமாள் சிலை தலைகுப் புற கீழே விழுந்தது. இதனால் கோவிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலை விழுந்த இடத்தில் பக்தர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையே சிலை மீது இருந்த அலங்காரங்கள் அனைத்தும் கலைந்தன. இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. கருட வாகனத்தில் அந்தச் சிலையை முறையாக கட்டவில்லை என கூறப்படுகிறது.
இதையடுத்து ஆகம விதிப்படி சாமி சிலை அலங்காரம் செய்து பரிகார பூஜைகள் என நடத்தின ராம். பின்னர் கோவிலை சுற்றி கருடவாகனத்தில் வீதிஉலா நடைபெற்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின்போது சிலை கீழே விழுந்த சம்பவம் சமூக வலைத்தளத்திலும் பரவி பக்தர் களிடையே “சாமிக்கு என்னதான் சக்தி” எனப் பலவகைக் கேள்விகள் எழுந்துள்ளன.
No comments:
Post a Comment