சென்னை,டிச.10 – அனைத்து மாவட்ட ஆட் சியர்கள், அரசுத் துறை செயலர்களுக்கு தலைமைச் செயலர் சிவ் தாஸ் மீனா அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது,
அரசுத் துறைகளின் செயலர்கள், துறைத் தலை வர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சியர்களுடன் தனிப் பட்ட முறையில் காணொலி வழியாக ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவ தாக அரசுக்குத் தகவல்கள் வந்துள்ளன. இதை ஒழுங்கு படுத்தும் வகையில், வாரந்தோறும் செவ்வாய்க் கிழமை மாலை 5 மணிக்கு, அனைத்து மாவட்ட ஆட் சியர்களுடன் தலைமைச் செயலரே காணொலி வழி யாக ஆலோசனை நடத்து வார். அன்றைய தினம் விடுமுறையாக இருந்தால், அதற்கடுத்த வேலை நாளன்று கூட்டம் நடத்தப் படும்.
காணொலி வழியான கூட்டத்தில் எந்தெந்த அம் சங்கள் குறித்து விவாதிக் கப்படும் என்பது குறித்து முந்தைய வாரத்தில் வெள் ளிக்கிழமை அன்றோ அதற்கு முன்பாகவோ மாவட்ட ஆட்சியர்களுக்குத் தக வல்கள் தெரிவிக்கப்படும்.
துறைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, புதிய திட்டங்கள், வழி காட்டு நெறிமுறைகள், மெதுவாக நடைபெறும் திட்டப் பணிகள் ஆகிய வற்றை துரிதப்படுத்த ஆலோசனைக் கூட்டத் தில் முன்னுரிமை அளிக்கப் படும். மாதத்தில் 4 செவ் வாய்க்கிழமைகளில் முதல் 2 செவ்வாய்க்கிழமைகளில் தலா 9 அரசுத் துறைகள் தொடர்பாகவும், 3, 4-ஆவது செவ்வாய்க்கிழமைகளில் தலா 10 துறைகள் குறித்தும் ஆலோசனைகள் நடத்தப் படும். இந்தக் கூட்டத்தில், ஆட்சியர்களுடன், சம்பந் தப்பட்ட துறைகளின் செயலர்களும், துறைத் தலைவர்களும் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செயலர்கள், துறைத் தலைவர்கள் அவர் களுக்குக் கீழ் இருக்கக் கூடிய துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஆட்சியர்களைக் காணொலியில் அழைத்து ஆலோசிக்கக் கூடாது. இதற்கு தலைமைச் செயலரின் அனுமதியைப் பெற வேண்டும்.
தேர்தல் துறை, மாநிலத் தேர்தல் ஆணையம், அர சுப் பணியாளர் தேர்வா ணையம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் வார ஆலோசனைக் கூட்டங் களில் தங்களுக்கான பட்டி யலிட்ட துறைகள் வரும் போது அதில் கலந்து கொள்ளலாம் என்று அவர் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment