புதுடில்லி,டிச.22- ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.
நாடாளுமன்ற நடவடிக்கைக ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் நேற்று (21.12.2023)நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன் போராட்டம் நடத்தி பேரணி யாக விஜய் சவுக் பகுதிக்கு வந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது மாநிலங்களவை தி.மு.க.குழு தலைவர் திருச்சி சிவா கூறியதாவது:-
நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறலால் நாட்டில் சாதாரண மக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? என கேள்வி எழுகிறது. இதுகுறித்து அவையில் பதில் தரப்பட வில்லை. மாறாக எங்களது குரல் நெரிக்கப்படுகிறது. உள்துறை அமைச்சர் இத்தனை நாளாக மாநிலங்களவைக்கு வராமல் இன்று வந்திருந்தார். விளக்கம் தரு வீர்களா? என்று கேட்டோம். ஆனால் பதில் சொல்லவில்லை. எங்களுக்கு ஒலிப்பெருக்கி இணைப்பு தரப்படவில்லை.”
ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்
நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேரடி ஒளிபரப்பு என்றால் அவை யில் நடப்பதை அப்படியே காட்ட வேண்டும். நாங்கள் விதிமுறைக ளுக்கு மாறாக நடந்திருந்தால் மக்கள் அதுகுறித்து தீர்மானிக்கட் டும். நேரலை என்பது ஆளுங் கட்சிக்கென ஆகிவிட்டது. நாங் கள் எவ்வளவோ குரல் கொடுத்தும் மசோதாக்களை நிறைவேற்றுவதி லேயே அக்கறை காட்டினார்கள். எங்களுக்கும் அக்கறை இருக்கிறது. ஆனால் பாதுகாப்பு கேள்விக் குறியாக இருக்கிறதே?.
நாளை (இன்று) ஜந்தர்மந்தரில் போராட்டம் நடைபெறும். எதிர்க் கட்சி உறுப்பினர்கள், பொதுமக் கள், ஜனநாயகத்தில் அக்கறை கொண்டவர்கள் பங்கேற்பார்கள். வர இருக்கிற தேர்தல் எப்போதும் போல வந்துபோகும் பொதுத் தேர்தல் அல்ல. ஜனநாயகத்தை காப்பாற்றும் பொறுப்பு மக்களுக்கு இருக்கிறது என்பதை பட்டி தொட்டியெங்கும் சென்று சொல் லுவோம். நாட்டை காப்பாற்றுங் கள். ஜனநாயகத்தை காப்பாற்றுங் கள். இந்த ஆட்சியில் இருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் என்று சொல்வது எங்களது கடமை.
-இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் உணரவில்லை
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப. சிதம்பரம் கூறுகையில், “இந்த அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிகள் இல்லாத நாடாளுமன்றம் தேவை. விவாதம் செய்ய யாரும் இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களது நோக்கம். தற்போது நிறைவேற்றப் பட்டிருக்கும் கடுமையான சட் டங்களின் விளைவுகளை மக்கள் உணரவில்லை. இந்தியாவை முழுக்க முழுக்க காவல்துறை கட்டுப்பாட் டில் கொண்டுவந்து, இந்துத்துவா ஈரானாக மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளனர்” என்றார்.
தி.மு.க. மக்களவை உறுப்பினர். தமிழச்சி தங்கபாண்டியன் கூறுகையில்,”ஜனநாயகத்தின் குரல் வளையை நெரித்து ஜனநாயகம் புதைக்கப்பட்டதாக நினைக்கி றோம். இதுவரை இத்தனை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ததே இல்லை. மசோதாக்களை விவாதம் இல்லாமல் நிறை வேற் றுவது கவலைக்குரிய விஷயம். ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. மக்கள் விழித்துக் கொள்ள வேண் டும்” என்றார்.
மிகப்பெரிய போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “148 உறுப்பினர் களை இடைநீக்கம் செய்து 7 மசோதாக்களை நிறைவேற்றியுள் ளனர். இந்த நடவடிக்கைகளை கண்டித்து காந்தி சிலை முன் போராடி வந்திருக்கிறோம். நாளை (இன்று) இந்தியா முழுக்க “இந்தியா” கூட்டணி சார்பில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும்” என்று கூறினார்.
No comments:
Post a Comment