ஜெய்ப்பூர், டிச. 6- ராஜஸ்தானில் காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றிய பாஜக யார் முதல மைச்சர் வேட்பாளர் என்பதை முடிவு செய்ய முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
தமக்கு 25 சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு பலம் இருப்பதை முன்வைத்து மேனாள் முதலமைச்சர் வசுந்தர ராஜே சிந்தியா அரியணை ஏற டில்லி மேலிடத்தை மிரட்டிக் கொண்டிருக் கிறா ராம். ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அசோக் கெலாட்டுக்கும் சச்சின் பைலட்டுக்கும் இடையே இடைவிடாத மோதலை காங்கிரஸ் மேலிடம் முடிவுக்கு கொண்டு வராமலேயே தேர்தலை சந்தித்தது. எல்லோரும் எதிர்பார்த்தது போலவே ஆட்சியை காங்கிரஸ், பாஜகவிடம் பறிகொடுத்தது. பாஜகவைப் பொறுத்தவரை சீனியரும் மேனாள் முதலமைச்சருமான வசுந்தர ராஜே சிந்தியாவை தொடக்கம் முதலே ஓரம்கட்டித்தான் வைத்தத்து. காங்கிரஸ் உட்கட்சிப் பூசலால் எளிதாக கிடைக்கும் வெற்றியை வசுந்தர ராஜே புறக்கணிப்பால் இழந்துவிடுவோமோ என்கிற அச்சம் பாஜகவுக்கு திடீரென ஏற்பட்டது. இதனால் மீண்டும் கொண்டு வரப் பட்டார் வசுந்தர ராஜே. அவரது ஆதரவாளர்களுக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட்டது. தற்போது ராஜஸ்தான் தேர்தலில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு பாஜக ஆட்சியைக் கைப்பற்றிவிட் டது.
ஆனால் முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய முடியாமல் விழித்துக் கொண்டிருக்கிறது பாஜக மேலிடம். உத்தரப்பிரதேசத்தை போல சாமியார் மகந்த் பாலக்நாதை பாஜக முதலமைச்சர் கூடும் என்கிற தகவல்கள் காட்டுத் தீயாக பரவின. ஆனால் தமக்குதான் முதலமைச்சர் நாற்காலி என்பதில் உறுதியாக இருக்கும் வசுந்தர ராஜே சிந்தியா, தமது ஆதரவு 25 சட்டமன்ற உறுப் பினர்களை அழைத்து ஆலோசனை நடத்தி பலத்தையும் காட்டி இருக் கிறார். அத்துடன் வசுந்தர ராஜே சிந்தியா இல்லாமல் போனால் ராஜஸ் தானில் பாஜக ஆட்சி அமைத்திருக் காது என்கிற குரல்களை வலுவாகவும் பேச வைத்துக் கொண்டிருக்கிறார் மகாராணி சிந்தியா. ஒருவேளை தமக்கு பதவி கிடைக்காமல் போனால் நிச்சயம் பாஜகவை ஆட்சி அமைக்க விடாமல் முட்டுக்கட்டை போட அத்தனை வேலைகளையும் செய்யவும் வசுந்தர ராஜே திட்டமிட்டிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இதனால் டில்லி மேலிடம் முடிவெடுக்க முடியா மல் தத்தளித்துக் கொண்டிருக்கிறதாம்.
No comments:
Post a Comment