ஒன்றிய அமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம்
புதுடில்லி, டிச. 6- உயர் கல்வி நிறுவனங்களில் ஜாதிவெறிப்பாகுபாடு காரணமாக மன அழுத்தத் திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட தாழ்த் தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் பற்றிய தர வுகள் தங்களிடம் இல்லை என்று ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாட்டில் 2019 - 2021 வரை 35 ஆயிரம் மாண வர்கள் தற்கொலை செய்து கொண்டதாக மக்களவை யில் ஒன்றிய அப்பாய்யா நாராயணசாமி கூறினார். இதுதொடர்பாக மக்க ளவை கேள்வி நேரத்தில் ஒன்றிய சமூகநீதித்துறை இணை அமைச்சர் அப்பை யா நாராயணசாமி கூறிய தாவது:
உயர்கல்வித் துறையா னது ஆலோசனைக் கலங்கள் மற்றும் தாழ்த்தப் பட்ட பழங்குடியின மாண வர்களின் அமைப்புகள், சம வாய்ப்புக் கலங்கள், மாண வர்களின் குறைதீர்ப்புக் கலங்கள், மாணவர்களின் குறைகேட்புக் குழு மற்றும் நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் தொடர்பு அதிகாரிகளை நியமித்துள்ளது. 'தீண்டாமை' நடைமுறை யில் இருந்து எழும் எந்தவொரு ஊனத்தையும் அமல்படுத்துவதற்கான தண்டனையை பரிந்துரைக் கும் குடிமை உரிமைகள் (PCR) சட்டம், 1955, மற்றும் பட்டியலிடப்பட்ட ஜாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன் கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 நடை முறையில் உள்ளது. தாழ்த் தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் உட்பட உறுப்பினர்களுக்கு எதி ரான வன்கொடுமை குற்றங் களைத் தடுக்க வேண்டும் கடந்த 2019ஆ-ம் ஆண்டு 10 ஆயிரத்து 335 மாணவர் களும், 2020ஆ-ம் ஆண்டு 12 ஆயிரத்து 526 மாணவர் களும், 2021ஆ-ம் ஆண்டு 13 ஆயிரத்து 89 மாணவர் களும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சமூக பாகுபாடு காரணமாக, தற் கொலை செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவர்கள் பற்றிய தரவுகள் இல்லை.
இவ் வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment