ஆளுநரை நியமிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் கோரும் தனிநபர் மசோதா மீது விவாதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

ஆளுநரை நியமிக்க மாநிலங்களுக்கு அதிகாரம் கோரும் தனிநபர் மசோதா மீது விவாதம்

புதுடில்லி, டிச. 10- ‘மக்களின் விருப்பத்துக்கு மதிப்ப ளிக்கும் வகையில் ஆளு நர்களை நியமிக்கும் அதி காரத்தை மாநிலங்க ளுக்கு வழங்க அரசமைப் புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று மாநி லங்களவையில் கேரளத் தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப் பினர் வி.சிவதாசன் வலி யுறுத்தினார்.

கடந்த 9-ஆம் தேதி அவர் அறிமுகம் செய்த, ஆளுநரை நியமிக்கும் காலனிய ஆட்சிக்கால நடைமுறையை முடிவுக் குக் கொண்டு வரும் வகையிலான ‘அரசமைப்பு சட்டத் திருத்த (பிரிவு 153 மற்றும் 155,156-இன் துணைப் பிரிவுகள் திருத்தம்) மசோதா 2022’ என்ற தனிநபர் மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்குமாறு உறுப்பினர்களை சிவ தாசன் கேட்டுக்கொண் டார்.
முன்னதாக, மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்த அவர், ‘மாநில ஆளுநர்களை, ஒன்றிய அரசின் பரிந்து ரையின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நியமிக்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும் என்பது மக்களின் விருப் பம். அந்த விருப்பத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், ஆளுநர்களை மாநிலங் களே நியமித்துக்கொள்ள அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப் பட வேண்டும். கூட் டாட்சி என்பது தேசத் தின், அரசமைப்புச் சட் டத்தின் அடிப்படை கட் டமைப்பு. ஆனால், மாநில அரசுகளின் அதி காரங்களைக் குறைக்கும் முயற்சியையே ஒன்றிய பாஜக அரசு 24 மணி நேரம் செய்துவருகிறது. ஒன்றிய அரசின் தீர்மா னங்களை நிறைவேற்றும் கருவியாக ஆளுநர்கள் பயன்படுத் தப்படுகின் றனர். இந்த காலனி ஆட் சிகால நடைமுறையை முடிவுக்குக் கொண்டுவர உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்’ என்றார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய பாஜக உறுப்பினர் அனில் அகர்வால், ‘ஜன நாயக நடைமுறையில் ஆளுநரின் பங்கு மிக முக்கியமானது. எனவே, இந்த மசோதாவை சிவ தாசன் கைவிட வேண்டும். உறுப்பினர்கள் இந்த மசோதாவை ஆதரிக்கக் கூடாது’ என்றார்.
காங்கிரஸ் உறுப்பினர் ஹனுமந்தையா பேசுகை யில், ‘சர்க்காரியா ஆணை யக்குழு பரிந்துரையின் அடிப்படையில், ஒன்றிய அரசு ஆளுநரை நியமிப்ப தற்கு முன்பாக மாநில அரசுடன் கலந்தாலோ சிக்க வேண்டும்’ என்றார்.

முன்னதாக, 70 தனி நபர் மசோதாக்கள் மாநி லங்களவையில் அறிமு கம் செய்யப்பட்டன.

No comments:

Post a Comment