புயல் மழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் குழு வருகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 10, 2023

புயல் மழையால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் குழு வருகை

சென்னை, டிச. 10 – மிக்ஜாம் புயல் சேதங்களை ஆய்வு செய்யமத்திய குழு நாளை (டிச.11) சென்னை வர உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்னை, செங்கல் பட்டு, காஞ்சிபுரம், திரு வள்ளூர் ஆகிய 4 மாவட் டங்களில் கடந்த 4ஆம் தேதி, மிக்ஜாம் புயல் கார ணமாக கனமழை பெய் தது. இதன் காரணமாக சென்னை மாநகரின் பல் வேறு பகுதிகளிலும் மழை நீர் தேங்கி பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு உள் ளாகினர். இதையடுத்து 7 நாட்களுக்கும் மேலாக மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் தண்ணீர் அகற்றப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்த நிலையில் 4 மாவட்டங்களில் ஏற்பட் டுள்ள மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசின் குழு சென்னை நாளை வருகிறது. வெள்ள பாதிப்பிற்குள்ளான 4 மாவட்டங்களிலும் இந்த குழு ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனாவுடன் அக்குழுவி னர் ஆலோசனை நடத்த உள்ளனர். வெள்ள பாதிப் பிற்கு நிவாரணமாக ஒன்றிய அரசிடம் 5,060 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கேட்டிருந்த நிலையில், முதல் கட்டமாக 450 கோடி ரூபாயை தமிழ் நாட்டிற்கு வழங்க பிரத மர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

இதே போல் சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்துக்காக ரூ.561.29 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்திருந்தது. மேலும் ஒன்றிய பாது காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் முதல மைச்சர் மு.க.ஸ்டாலினு டன் ஆலோசனை நடத்தி இருந்தார். இதேபோல் ஒன்றிய இணை அமைச் சர் ராஜீவ் சந்திரசேகர் சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்திருந்தார்.

No comments:

Post a Comment